காங்கிரஸ் கட்சிக்கே போனதே கரூர் லோக்சபா தொகுதி.. திமுக தொண்டர்களின் உக்கிர போராட்டம் வீண்!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த திமுக தொண்டர்களை கடும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாடு, புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை மற்றும் புதுவை ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது.
இதில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கி இருப்பது திமுக தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களின் சட்டசபை தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி. கரூர். கிருஷ்ணராயபுரம், விராலிமலை, மணப்பாறை ஆகியவற்றைக் கொண்டது கரூர் லோக்சபா தொகுதி.
1957-ம் ஆண்டு முதல் 16 தேர்தல்களை எதிர்கொண்ட கரூர் தொகுதியில், அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 7 முறை வென்றுள்ளது. அண்ணாதிமுக 6 முறை வென்றுள்ளது. திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் தலா 1 தேர்தலில் வென்றுள்ளன. 1957 முதல் 1984-ம் ஆண்டு வரை கரூர் லோக்சபா தொகுதி எம்பிக்கள் அறியப்படாத முகங்களாக இருந்தனர். அண்ணா திமுகவின் தம்பிதுரை 4 முறை இத்தொகுதியில் வென்று விஐபி தொகுதியாக்கினார். திமுகவின் சீனியர்களில் ஒருவரான கேசி பழனிசாமி 2004-ல் இத்தொகுதியில் வென்றார். டெல்லி காங்கிரஸ் மேலிடத்துடன் மிக நெருக்கமான ஜோதிமணி தற்போது கரூர் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார்.
ஆனால் கரூர் லோக்சபா தொகுதியில் இந்த முறை திமுக போட்டியிட்டாக வேண்டும் என்பது அத்தொகுதி திமுக தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் இந்த கருத்தை திமுக தொண்டர்கள் முன்வைத்தனர். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருமே இந்த முறை எப்படியும் திமுக வேட்பாளர்தான் கரூர் லோக்சபா தொகுதியில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தற்போது கரூர் லோக்சபா தொகுதி, மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது என குமுறுகின்றனர் திமுகவினர்.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications