விசிகவுக்கு 2 தனித் தொகுதி, நீண்ட கால கோரிக்கை 1 பொதுத் தொகுதி தருமா திமுக? நாளை பேச்சுவார்த்தை!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸுக்கு அதிகபட்சம் 8, இடதுசாரிகளுக்கு தலா 2+1 ராஜ்யசபா, மதிமுகவுக்கு 1+1 ராஜ்யசபா , விசிக 2 என்கிற பார்முலாவை முன்வைக்கிறது. இது 2019 லோக்சபா தேர்தலில் ஒப்புக் கொள்ளப்பட்ட தொகுதி பங்கீடு போன்றதுதான். இம்முறை காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளைக் கேட்பது திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 8 தொகுதிகள்தான் அதிகபட்சம் என்கிற நிலையில் திமுக உறுதியாக உள்ளதாம். 2019 தேர்தலில் 9 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வென்றது. அதனால் காங்கிரஸுக்கு 8 தொகுதிகளை இறுதியாக ஒதுக்கலாம் என்பது திமுகவின் நிலைப்பாடாம். அதேபோல பிற கட்சிகளும் கூடுதலாக 1 தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும் இணைகிறது.
திமுகவைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 24 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிட வேண்டும் என்பது இலக்காக இருக்கிறது. இந்த பின்னணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மொத்தம் 3 தொகுதிகளை திமுகவிடம் எதிர்பார்க்கிறது. 2 தனித் தொகுதிகள், 1 பொதுத் தொகுதி என்பது விசிகவின் எதிர்பார்ப்பு. விசிகவைப் பொறுத்தவரையில் பொதுத் தொகுதியை பல ஆண்டுகளாக எதிர்பார்த்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இம்முறையும் திமுகவிடம் ஒரு பொதுத் தொகுதியை பெறுவதற்காக விசிக அழுத்தம் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விசிக குழுவினர் நாளை சென்னையில் திமுக குழுவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் விசிக தனி சின்னத்தில் போட்டியிடுவதையும் வலியுறுத்தக் கூடுமாம். ஆனால் திமுக தரப்பு 2 தொகுதிகளில் 1-ல் தனி சின்னம்; 1-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டுக் கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி!












Click it and Unblock the Notifications