‛அழியாத மை’.. விரலில் இடப்படும் தேர்தல் மை அழியாமல் இருப்பது ஏன்? 10 மில்லி கிராமின் விலை தெரியுமா?
சென்னை: இந்தியாவில் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலின்போது ஓட்டளித்தன் அடையாளமாக விரலில் வைக்கப்படும் அழியாத மை -யின் வரலாறு உங்களுக்கு தெரியுமா? இந்த அழியா மை எங்கு தயாரிக்கப்படுகிறது? எப்படி தயாரிக்கப்படுகிறது? விரலில் எத்தனை நாட்கள் இந்த மை அழியாமல் இருக்கும்? வெறும் 10 மில்லி குப்பியின் விலை என்ன? இந்த மையின் பின்னணியில் இருக்கும் அறிவியல் என்ன? என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ம் தேதி முதற்கட்ட லோக்சபா தேர்தலும் ஜுன் 1ம் தேதி கடைசி அதாவது 7 கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

இதனால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மக்களாகிய நாம் அனைவரும் ஓட்டுப்போட தயாராகி வருகிறோம். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில் தேர்தலின் அடையாளமாக அழியா மை உள்ளது. ஓட்டுச்சாவடிக்கு நாம் நுழைந்து நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பது சரிபார்க்கப்பட்ட உடன் விரலில் அழியா மை வைக்கப்படும். அதன்பிறகே நாம் அனைவரும் பிடித்த கட்சியின் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க முடியும். வரும் லோக்சபா தேர்தலிலும் கூட இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட உள்ளது.
நாம் பலமுறை ஓட்டளித்து இருந்தாலும் கூட நம்மில் பலருக்கும் கூட தேர்தலில் அழியா மை வைக்கப்படுவது ஏன்? அது எப்படி தயாரிக்கப்படுகிறது? எங்கு தயாரிக்கப்படுகிறது? அதன் விலை என்ன? என்பது தெரியாமல் இருக்கலாம். சிலருக்கு தெரிந்து இருக்கலாம். இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தலின்போது விரலில் வைக்கப்படும் அழியா மையின் வரலாறு, தயாரிப்பு முறை, அழியா மையின் விலை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:

அழியா மை வைப்பது ஏன்?: பொதுவாக தேர்தல் சமயங்களில் கள்ளஓட்டு என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. ஓட்டளித்த நபரே மீண்டும் மீண்டும் ஓட்டளிக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் அதோடு ஓட்டளித்த நபரை அடையாளம் காணும் நோக்கத்தில் தான் இந்த அழியா மை தேர்தல் சமயத்தில் விரலில் வைக்கப்படுகிறது.
அழியா மை தயாரிப்பது யார்?: இந்தியாவை பொறுத்தமட்டில் லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களின்போது விரலில் வைக்கப்படும் அழியா மை-யை ஒரேயொரு நிறுவனம் தான் தயாரித்து வழங்குகிறது. அந்த நிறுவனம் கர்நாடகாவில் உள்ளது. கர்நாடகாவில் உள்ள எம்பிவிஐ எனும் மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் (Mysore Paints and Varnish Limited or MPVI) எனும் நிறுவனம் தான் அழியாத மை-யை தயாரித்து வழங்குகிறது.
இந்த நிறுவனம் கர்நாடகா அரசின் நிறுவனமாகும். மைசூரில் மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுனம் செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கான அழியாத மை தயாரிப்புக்கான ஒப்பந்தத்தை இந்த நிறுவனம் கடந்த 1962 முதல் பெற்று வழங்கி வருகிறது. தற்போது லோக்சபா தேர்தலுக்கான அழியாத மை தயாரிப்பு பணிகள் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன.
அழியாத மை தயாரிப்பது எப்படி?: தேர்தலில் ஓட்டளித்தன் அடையாளமாக விரலில் வைக்கப்படும் இந்த மை சில்வர் நைட்ரேட் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த மையில் சில்வர் நைட்ரேட் செறிவு (Concentration)என்பது 7 முதல் 25 சதவீதம் வரை இருக்கும். இந்த சில்வர் நைட்ரேட் சூரியஒளியுடன் வினைபுரியும் தன்மை கொண்டது. இதனால் மை வைக்கப்பட்ட விரலில் சூரியஒளி பட்டவுடன் ஊதா நிறத்தில் இருக்கும் மை கருப்பு நிறமாக மாறிவிடும்.
எத்தனை நாள் அழியாது?: விரலில் வைக்கப்படும் அழியாத மை மை முற்றிலுமாக அழிவது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட தன்மையில் இருக்கும். குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகபட்சமாக 2 வாரங்கள் வரை விரலில் அழியாமல் இருக்கும். தோலில் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும் வரை மை அழியாமல் இருக்கும்.
விலை என்ன?: அழியாத மை என்பது சிறிய குப்பியில் அடைத்து ஓட்டுச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. வெறும் 10 மில்லி கிராம் எடை கொண்ட அழியாத மை குப்பியின் (Vial) விலை என்பது இப்போது 174 ரூபாயாக உள்ளது. கடந்த தேர்தலின்போது ஒரு குப்பியின் விலை ரூ.160 என்ற அளவில் இருந்தது. தற்போது மை தயாரிப்புக்கான சில்வர் நைட்ரேட்டின் விலை உயர்ந்துள்ளதால் குப்பியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு எத்தனை குப்பி?: 10 மில்லி கிராம் குப்பியில் உள்ள அழியாத மை-யை 700 வாக்காளர்களுக்கு பயன்படுத்த முடியும். தற்போது நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கு இந்தியாவில் 26.55 லட்சம் குப்பிகள் தேவைப்படுகின்றன. இதன் விலை மட்டும் ரூ.55 கோடியாகும். இந்த மைசூர் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் நிறுவனம் இந்தியாவுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் தேர்தல் மையை தயாரித்து வழங்குகிறது.
இந்த ஆண்டு மட்டும் இந்தியா, அமெரிக்கா உள்பட 60 நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி இந்த நிறுவனம் சார்பில் கம்போடியா, மலேசியா, மங்கோலியா, பிஜி தீவுகள், கயானா-பிசா, சியாரா லியான் உள்பட பல நாடுகளுக்கும் இங்கிருந்து தான் தேர்தலுக்கான அழியா மை சப்ளை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications