சென்னை கூட்டத்தில் அதிமுக பற்றி வாயே திறக்காத மோடி.. இப்பவும் 'கூட்டணி’க்காக இலவு காத்த கிளியா பாஜக?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான சென்னை பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்திருந்தார். அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவை பற்றி ஒரே ஒரு வார்த்தை கூட பேசாததுதான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற பாஜகவின் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசமாகவும் உருக்கமாகவும் பேசினார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனமும் செய்தார் பிரதமர் மோடி.

வயிற்று வலி சிலருக்கு: பிரதமர் மோடி தமது பேச்சில், நான் தமிழகம் வரும்போது சிலருக்கு வயிற்றுவலி ஏற்படுகிறது. வயிற்றிலே புளியைக் கரைக்கிறது. அதற்கு காரணம் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலுவடைந்து வருவதுதான். ஆளும் திமுக அரசு சென்னை மக்களின் தேவைகளையும் கனவுகளையும் கண்டுகொள்ளவே இல்லை. அண்மையில் சென்னையில் மிகப் பெரிய புயல் வந்தது. இதனால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவதிப்பட்ட மக்களுக்கு திமுக அரசு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக மக்களின் கவலையை மேலும் மேலும் அதிகரிக்கும் வேலையைத்தான் செய்திருக்கிறது. திமுக அரசுக்கு மக்களின் துயரங்கள், துன்பங்கள் குறித்து அக்கறையோ கவலையோ கிடையாது. தமிழக மக்களே உங்களைப் பற்றியும் திமுகவுக்கு கவலையில்லை என்றார்.
கொள்ளை பணம் வசூல்: அத்துடன் வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளுக்கான லட்சக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளையடிக்க முடியாமல் இருக்கிறதே என்பதுதான் திமுகவினருக்கு இருக்கும் பெரும் துயரம். அந்த திட்டத்தை நாங்கள்தான் செய்தோம் என்று ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கின்றனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் பணத்தை இந்த மோடி கொள்ளையடிக்க விடமாட்டேன். எந்தப் பணத்தை நீங்கள் கொள்ளை அடிக்கிறீர்களோ- கொள்ளை அடித்திருக்கிறீர்களோ அந்தப் பணம் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம் எனவும் ஆவேசம் காட்டினார் பிரதமர் மோடி.
அதிமுக மீது அட்டாக் இல்லை: இவ்வளவு ஆவேசமாக திமுகவை விமர்சித்த பிரதமர் மோடி மறந்தும் கூட அதிமுக பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அதிமுக என்ற ஒரு அரசியல் கட்சி தமிழ்நாட்டில் இருப்பதாகவே மோடியின் பேச்சு வெளிப்படுத்தவும் இல்லை. இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள், இந்த நிமிடம் வரை பாஜக கூட்டணிக்கு அதிமுகவை "எப்படியா"வது கொண்டு வந்துவிடலாம் என கனவு காண்கிறது டெல்லி. ஏதோ ஒரு அஸ்திரத்தைக் காட்டியாவது அதிமுகவை பணிய வைக்கலாம் என நினைக்கிறது டெல்லி. இதனை சுட்டிக்காட்டும் வகையில் உங்களை இதுவரை கைவைக்கவும் இல்லை.. மோடி விமர்சிக்கவும் இல்லை.. முடிவு உங்கள் கையில்தான் என அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ்தான் மோடியின் இந்த கண்டுகொள்ளாத பேச்சு என்கின்றனர்.
கூட்டணிக்கான காத்திருப்பு: மேலும், லோக்சபா தேர்தலுக்கான தமிழ்நாட்டு பாஜக கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை சேரவில்லை. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் அதிமுக அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையும் நடத்துகிறது. இதனால் பாமக, தேமுதிக பாஜக பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. பாஜகவோ அதிமுக எப்படியும் வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் இன்னமும் இருப்பதால் பாமகவும் தேமுதிகவும் குழப்பத்தில் இருக்கின்றன எனவும் கூறப்படுகிறது.
இலவு காத்த கிளியாகவே பாஜக!












Click it and Unblock the Notifications