திருச்சியில் மாஸ்காட்டிய திருமாவளவன்.. திமுகவுடன் ஜன.30-ல் பேச்சு..கேட்கும் 3 தொகுதிகள் கிடைக்குமா?
சென்னை: திருச்சியில் மாநாட்டை கூட்டி தமது பலத்தை காட்டியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இந்த ஜோரில் வரும் 30-ந் தேதி திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துகிறது விசிக. இப்பேச்சுவார்த்தையில் 3 தொகுதிகளை கேட்பது என விசிக தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் 2019 லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். தற்போதும் திமுக தலைமையான விசிகவுக்கு இதே 2 தொகுதிகளை ஒதுக்கலாம் என நினைக்கிறதாம்.

திருமாவின் கொள்கை கர்ஜனை: திமுகவைப் பொறுத்தவரை விசிகவை கூட்டணியில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. திருச்சியில் நேற்று நடைபெற்ற விசிக மாநாட்டில், திருமாவளவன் குறித்து நெகிழ்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. திருமாவளவன், விசிக குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?' என்பதற்கு இலக்கணமாகத் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் அருமைச் சகோதரர் திருமாவளவன் அவர்களின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க கூடியிருக்கிறீர்கள். அருமைச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களை அவர் சட்டக்கல்லூரி மாணவராக - மாணவர் தி.மு.க.வில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும்! அப்போதே கல்லூரி மேடைகளிலும் - கழக மாணவரணி மேடைகளிலும் அவரின் பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும்!
தோளோடு தோளாக நிற்கும் திருமா: நாள்தோறும் கொள்கை உரம் வலுப்பெறும் இளம் காளையாகத்தான் இன்றைக்கும் ஜனநாயகம் காக்க இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அன்றைக்குக் கழகத்துக்குள்ளே முழங்கினார். இன்றைக்கு கழகக் கூட்டணிக்குள் இருந்து முழங்கி வருகிறார். சகோதரர் திருமா அவர்கள், எப்போதும் - எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு உள்ளே இருப்பவர்! மன்னிக்கவும் நமக்குள்ளே இருப்பவர்! தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் தோளோடு தோளாக துணை நிற்பவர் சகோதரர் திருமா அவர்கள்.
கொள்கை உறவாளர்கள்: நாங்கள் எப்போதும் தமிழினத்தின் வலிமைக்கு உரம் சேர்க்கும் அடிப்படையில்தான் இணைந்து இயங்குகிறோம். நமக்கிடையே இருப்பது தேர்தல் உறவு அல்ல; அரசியல் உறவு அல்ல; கொள்கை உறவு! தந்தை பெரியாரையும் - புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராலாவது பிரிக்க முடியுமா? அதுபோலதான், திராவிட முன்னேற்றக் கழகமும் - விடுதலைச் சிறுத்தைகளும் என அழுத்தம் திருத்தமாகவே குறிப்பிட்டார். இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
விசிக கேட்கும் 3 தொகுதிகள்: இந்த நிலையில் திமுகவின் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு வரும் 30-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் திமுக தரப்பு அதே 2 தொகுதிகளை வாங்கி கொள்ளலாம் என பேச இருக்கிறதாம். ஆனால் விசிக தரப்பில் மொத்தம் 3 தொகுதிகளை கேட்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். திருச்சி மாநாட்டில் திருமாவளவன் காட்டிய வலிமை, பாமக இல்லாத சூழ்நிலையில் வடதமிழ்நாட்டில் வாக்கு வங்கியை வலிமையாக தக்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திமுக தலைமை விசிகவுக்கு 3 தொகுதிகளை ஒதுக்குமா? என்பது விரைவில் தெரிய வரும்.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications