நாம் தமிழர் சின்னம் எது? மேடையில் உருக்கமாக கவிதை சொன்ன சீமான்! அப்போ ‛மைக்’ சின்னம்?
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படவில்லை. மாறாக ‛மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியிடம் சின்னம் குறித்து மேடையில் சீமான் உருக்கமான கவிதை நடையில் பேசினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு 45 நாட்கள் கழித்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் முடிவு ஜுன் 4ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. இந்த தேர்தலில் வழக்கம்போல் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
இதற்கிடையே தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் இன்று நடந்தது. இதில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார். மொத்தம் 20 பெண்கள், 20 ஆண்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் லோக்சாப தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் சின்னம் குறித்து சீமான் மேடையில் உருக்கமாக கவிதை நடையில் பேசினார். சீமான் பேசியதாவது:
வரும் தேர்தலில் வழக்கம்போல் தனித்து தனித்துவத்தோடு நிற்கிறோம். தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்ட வேண்டும் என்பதாலே தனித்து நிற்கிறோம். சின்னத்தை பார்த்த வாக்களிப்பதை விட்டுவிட்டு எண்ணத்தை பார்த்து வாக்களியுங்கள். இங் கூடியிருப்பது சீமானுக்கான கூட்டம் அல்ல. சீமான் ஏற்றுக்கொண்ட தலைவனுக்கான கூட்டம்.
வலிமையற்ற எளிய மகன் ஏதுமற்று நிற்கிறபோது ஆயுதத்தை வைத்து அழித்து ஒழிக்கிற இனத்தை காக்கிற நிலையை அவன் உணர்ந்தால் உயிரையே ஏன் ஆயுதமாக ஏந்தக்கூடாது. அப்படிதான் சீமானும் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை உயிர் சொந்தங்கள் அறிந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்களை அறிமுகம் செய்ய வந்தாலும் இன்னும் சின்னம் எதுவென்று தெரியவில்லை.
உங்கள் தொகுதியில் யார் போட்டி? 40 நாம் தமிழர் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்த சீமான்! முழு பட்டியல்
என் மக்கள் என் சின்னத்தை தேடமாட்டார்கள் என் எண்ணத்தை தான் எடுத்து கொள்வார்கள். பணமில்லை.. கவலையில்லை. என் மக்களுக்கு தன்னலமற்று சேவை செய்ய வேண்டும் என்ற மனம் போதுமானது. நாங்கள் வெறும் பதவிக்காணவர்கள் அல்ல. என் மக்களின் உதவிக்கானவர்கள். நாங்கள் வெறும் பணத்துக்கானவர்கள் அல்ல. நாங்கள் பிறந்த பெருமைமிக்க தமிழர் என்ற இனத்துக்கானவர்.
நாங்கள் அரசியல் செய்ய வந்தது மக்களை வைத்து பிழைக்க அல்ல... மக்களுக்காக உழைக்க.. களத்தில் இருக்கும் பணநாயகத்தை ஒழித்து மாண்புமிகு ஜனநாயகத்தை காக்க.. சின்னம் வைத்திருக்கும் கட்சிகளை விட சின்னம் இல்லாத, சின்னம் எதுவென்று தெரியாத கட்சி துடிப்போடும், வெறியோடும் களத்தில் நிற்கிறது. கவிஞர் வைரமுத்து சொல்வார் இரைக்காக விரட்டும் விலங்கை விட உயிரை காக்க ஓடும் விலங்கின் வேகம் அதிகம் என்று. நாங்கள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிற ஒரு தேசிய இனம். என் இனத்தை மீட்க காக்க போராடும் எங்களின் வேகம் உலகத்தில் யாருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு இருக்கும்’’ என்றார்.
நாம் தமிழர் கட்சி கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் கடந்த சட்டசபை தேர்தல்களின்போது கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாமல் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தான் உள்ளது. இதனால் ஒவ்வொரு தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி தனக்கான சின்னத்தை பெற முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
ஆனால் இந்த முறை சீமான் கரும்பு விவசாயி சின்னத்துக்கு சரியான நேரத்தில் விண்ணப்பிக்கவில்லை. இதனால் கரும்பு விவசாயி சின்னம் என்பது பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அந்த கட்சிக்கு விட்டு கொடுக்கவில்லை. மேலும் சீமான் தொடர்ந்த வழக்கிலும் சாதகமான உத்தரவு வரவில்லை. இத்தகைய சூழலில் தான் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கியது. ஆனால் சீமான் தரப்பில் வேறு சின்னம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நாம் தமிழர் சின்னம் என்ன? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications