தமிழகத்தை மொத்தமாக அள்ளும் திமுக கூட்டணி! அதிமுக - பாஜகவுக்கு புது கருத்து கணிப்பில் ஆறுதல்.. என்ன?
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் அதிக இடங்களில் வெல்லும் எனவும், அதிமுக, பாஜகவுக்கு ஆறுதல் வெற்றி மட்டுமே கிடைக்கும் என புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளது. ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை மேற்கொண்டு வரும் Election Forecast அமைப்பு சார்பில் தமிழகத்தில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன். அதன்படி மீண்டும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் அதிக இடங்களில் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 37 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடத்திலும், அதிமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தேனியை தவிர்த்து மீதமுள்ள 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் கடந்த முறையை விட ஒரு தொகுதி குறைவாக திமுகவுக்கு கிடைக்கலாம் என Election Forecast கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications