சிபிஎம் கட்சியின் கோவை, மதுரை வேட்பாளர்கள்.. களமிறங்கும் பி.ஆர் நடராஜன், சு.வெங்கடேசன்!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் கோவை, மதுரை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் எங்கு போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது.

திமுக இந்த தகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை இன்று காலைதான் வெளியிட்டது. அதன்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோயம்புத்தூர் மற்றும் மதுரை தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தற்பொழுது திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் கோவை, மதுரை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவையில் பி.ஆர் நடராஜன் போட்டியிடுகிறார். இவர் கோவை மக்களவை தொகுதி முன்னாள் எம்பி ஆவார். அங்கு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர் இவர்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் பல்வேறு தொடர்களை எழுதிய பிரபல எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகளை செய்து இருக்கிறார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications