இங்கதான் போட்டியிடப் போறோம்... எங்க கூட்டணி பெயர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.. ஸ்டாலின்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் லோக்சபா தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு -வீடியோ

    சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் லோக்சபா தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    திமுக போட்டியிடும் 20 தொகுதிகள், மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று தற்போது வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி துவங்க உள்ளது.

    ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தேர்தலுக்காக திமுக மிகப்பெரிய கூட்டணியை அமைத்து இருக்கிறது.

    கூட்டணி என்ன

    கூட்டணி என்ன

    திமுக கூட்டணியில் 10ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிடும்.

    அறிவித்தார்

    அறிவித்தார்

    அனைத்து கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்றுதான் காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஒப்பந்தம் செய்தது. அதன்பின் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் இதற்காக ஆலோசனை நடந்தது. கூட்டணி தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது அறிவித்து இருக்கிறார்.

    [ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019]

    ஸ்டாலின் அறிவிப்பு

    திமுக போட்டியிடும் தொகுதிகள் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளகுறிச்சி, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி , ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடும்.

    காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

    காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

    காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி,கரூர், சிவகங்கை, திருச்சி, தேனி, விருதுநகர், குமரி, புதுச்சேரி.

    விசிக மதிமுக

    விசிக மதிமுக

    விசிக போட்டியிடும் தொகுதிகள்: சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி)
    ஐஜேகே போட்டியிடும் தொகுதி: பெரம்பலூர்.
    மதிமுக போட்டியிடும் தொகுதி : ஈரோடு

    மற்ற கட்சிகள்

    மற்ற கட்சிகள்


    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதி: கோவை, மதுரை.

    இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதி: திருப்பூர், நாகை (தனி).

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதி: ராமநாதபுரம்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி: நாமக்கல்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+