சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் 40 தொகுதியிலும் களமிறங்க முடிவு.. கமல் அதிரடி

லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் மக்களில் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    40 தொகுதியிலும் தனித்து போட்டி.. கமல்ஹாசன் அறிவிப்பு- வீடியோ

    சென்னை: லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    லோக்சபா தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளுக்கு அடுத்தபடியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நல்ல வாக்குகளை பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

    தமிழகத்தின் தனித்த மூன்றாவது பெரிய கட்சியாக மக்கள் நீதி மய்யம் வர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை கமல்ஹாசன் எடுத்து இருக்கிறார். ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கமல்ஹாசன் இது குறித்து தகவல் அளித்துள்ளார்.

    லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சி தனித்து போட்டி ஏன்? பின்னணியில் நடந்த சதுரங்க ஆட்டம் லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சி தனித்து போட்டி ஏன்? பின்னணியில் நடந்த சதுரங்க ஆட்டம்

    தனித்து போட்டியிட முடிவு

    தனித்து போட்டியிட முடிவு

    கமல்ஹாசன் தனது பேட்டியில், லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும். எங்களுக்கு அதற்கான வலிமை இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது. இதுவரை நாங்கள் கூட்டணிக்கான வாய்ப்புகளை அலசி வந்தோம். ஆனால் பிற கட்சிகளின் பாரங்களை எங்களால் சுமக்க முடியாது.

    காங்கிரஸ் கூட்டணி

    காங்கிரஸ் கூட்டணி

    நாங்கள் திமுக, அதிமுக உடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டோம். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்தால், அந்த கூட்டணியிலும் சேர மாட்டோம். தமிழ்நாடுதான் எங்களுக்கு முக்கியம். எங்களின் நோக்கம் சீட் பெறுவது கிடையாது. கொள்கைதான். இந்த மாநிலத்தின் விதியை மாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ஏன் தனிமை

    ஏன் தனிமை

    இதனால்தான் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று கூறுகிறோம். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த மாற்று கருத்தோ, முடிவோ இல்லை. 40 தொகுதியிலும் மநீம வேட்பாளர்களை தனியாக நிறுத்தும். நாங்கள் எல்லா கட்சிகளின் பலத்தையும் உடைக்க போகிறோம்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    நாங்கள் தீவிரமாக உழைக்க போகிறோம். இது ஆசை அல்ல. இது மிக தீவிரமான கொள்கை. நாங்கள் அனைத்து கட்சிகளையும் தேர்தலில் ஆட வைக்க போகிறோம். லோக்சபா தேர்தலில் 25-40 வயது நபர்களை நிற்க வைக்க போகிறோம். இதற்கான தேர்வு விரைவில் நடக்கும், என்று கமல்ஹாசன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Lok Sabha Elections 2019: Makkal Needhi Maiam will contest in all 40 seats without alliance says Kamal Haasan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X