உங்க தொகுதியில் எத்தனை சுற்றில் முடிவு தெரியும்? இதை படிங்க புரியும்!
நாளை வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சுற்று வாக்குகளில் வாக்குகள் எண்ணப்படும் என்று விவரம் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: நாளை வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சுற்று வாக்குகளில் வாக்குகள் எண்ணப்படும் என்று விவரம் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முதல் நாளோடு தேர்தல் நடந்து முடிந்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தது. அதேபோல் மே 19ம் தேதி 4 தொகுதி இடைத்தேர்தலும் நடந்தது.
இந்த நிலையில் நாளை காலை லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நிறைய சுற்றுகள் நடக்கும். சில தொகுதிகளில் இரவு வரை வாக்குகள் எண்ணப்படும்.
இந்த சுற்றுகளை தீர்மானிக்க கணக்கு ஒன்று பின்பற்றப்படுகிறது. அதன்படி, உங்கள் தொகுதியில் எத்தனை பூத்துகள் இருக்கிறதோ அதை 14ல் வகுத்து வரும் ரவுண்டுகள்தான் விடை. உதாரணமாக உங்கள் தொகுதியில் 14 பூத்கள் இருந்தால், ஒரு ரவுண்டிலேயே உங்கள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.

இப்படி 14 ஆக பிரிப்பதற்கு காரணம் இருக்கிறது. மொத்தமாக வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். இதனால் 14ஐ வைத்து எத்தனை ரவுண்டுகள் நடக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். பின் முடிவுகளை கருப்பு பலகையில் எழுதுவார்கள்.
அதன்படி திருவள்ளூரில் 34 சுற்றுகள், தென் சென்னையில் 21 சுற்றுகள், வடசென்னையில் 22 சுற்றுகள், மத்திய சென்னையில் 19 சுற்றுகள், தருமபுரியில் 23 சுற்றுகள் திருச்சியில் 25 சுற்றுகள் , தூத்துக்குடியில் 21 சுற்றுகள், கோவையில் 30 சுற்றுகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில் நாளைக்குள் கண்டிப்பாக முழு முடிவு தெரிந்துவிடும் என்று கூறுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications