மீண்டும் மோடி.. 3வது முறையாக அரியணை ஏறுகிறார்.. அடித்து சொன்ன லோக்போல் மெகா எக்சிட் போல்
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 325-335 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று லோக்போல் மெகா சர்வே எக்சிட் போல் தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணி 155-165 இடங்களில் வெல்லும் என்று லோக்போல் மெகா சர்வே எக்சிட் போல் தெரிவித்துள்ளது. மற்ற எதிர்க்கட்சிகள் 48-55 இடங்களில் வெல்லும் என்று லோக்போல் மெகா சர்வே எக்சிட் போல் தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல்: நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதன்பின் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.
தொடர்ந்து 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்பின்பான ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து இன்று கடைசி கட்ட தேர்தல் நடந்தது.
கடந்த தேர்தல்: கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது.
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 325-335 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று லோக்போல் மெகா சர்வே எக்சிட் போல் தெரிவித்துள்ளது. 20க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணியுடன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. இந்த நிலையில் இந்தியா கூட்டணி தோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல்: உலக வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தல் இது. முந்தைய தேர்தலை விஞ்சி, 44 நாட்கள் நீடிக்கும் நீண்ட தேர்தல் ஆகும். 1951-52 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இவ்வளவு அதிக நாட்கள் ஒரு தேர்தல் நடக்கிறது. இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி தலைமையிலான "மோடி கேரண்டி" கோஷத்துடன் மீண்டும் மூன்றாவது முறையாக தேர்தலை எதிர்கொள்கிறார்
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications