Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக கண்டிப்பாக 300+ அடிக்கும்.. தனி மெஜாரிட்டி கிடைப்பது உறுதி.. அடித்து சொல்லும் பிரஷாந்த் கிஷோர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான இடங்களில் வெல்லும், மேலும் தேசிய அளவில் 300-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்று அரசியல் வியூகவாதி பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று அவர் கணித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Lok sabha Prediction Survey Prashant Kishor says BJP will get 300 seats on its own

பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.

370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.

பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.

கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.

தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள கணிப்பில், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 370 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனித்து வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை. அவர்கள் 370 இடங்களில் தனியாக வெல்ல வாய்ப்பே இல்லை.

ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான இடங்களில் வெல்லும், மேலும் தேசிய அளவில் 300-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும்

அவர்கள் (பாஜக) தெலுங்கானாவில் முதல் அல்லது இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பார்கள், அது பெரிய விஷயம். நிச்சயம் ஒடிசாவில் முதலிடத்தைப் பெறுவார்கள். மேற்கு வங்கத்தில் பாஜக முதலிடத்தைப் பிடிக்கப் போகிறது. இதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தமிழ்நாட்டில் இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தை பெறுவார்கள்.

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டக்கூடும் என்றார். 2019 இல், பாஜக கட்சி 3.66 சதவீத வாக்குகளைப் பெற்றது, ஆனால் எந்த இடமும் இல்லை. இந்த முறை சில கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு 3-5 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் இணைந்து 204 இடங்களைக் கொண்டுள்ளன, ஆனால் 2014 அல்லது 2019 இல் இந்த அனைத்து மாநிலங்களிலும் பாஜகவால் 50 இடங்களைக் கடக்க முடியவில்லை. இந்த மாநிலங்களில் 2014ல் 29 இடங்களிலும், 2019ல் 47 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை இங்கே கூடுதல் இடங்களை பாஜக வெல்லும்.

இதன் மூலம் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான இடங்களில் வெல்லும், மேலும் தேசிய அளவில் 300-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்று அரசியல் வியூகவாதி பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+