370 இடங்கள் ஜெயிக்க சான்ஸே இல்லை.. மோடி சொல்வது நடக்காது.. பிரசாந்த் கிஷோர் பரபர கணிப்பு.. ட்விஸ்ட்
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 370 இடங்களைப் பெறுவது சாத்தியமில்லை என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

மொத்தமாக ரிசல்ட் என்ன: மக்களவையின் ஒட்டுமொத்த கணிப்பு:
மொத்த இடங்கள்: 543
பாஜக கூட்டணி: 366
இந்தியா கூட்டணி: 104
மற்றவை: 73
மீண்டும் பாஜக ஆட்சி: இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இப்படி வரிசையாக பாஜகவிற்கு ஆதரவாக பல்வேறு கணிப்புகள் வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான், பிரசாந்த் கிஷோர், பாஜக தனித்து 370 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றால் மிகவும் ஆச்சரியப்படுவேன் என்று கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் இந்த எண்ணிக்கையைப் பற்றி பேசினார். ஆனால் இது பாஜக தொண்டர்களுக்கான இலக்கு என்று நான் நினைக்கிறேன், நிஜத்தில் சாத்தியம் அல்ல," என்று பிரசாந்த் கிஷோர் வரவிருக்கும் தேர்தலுக்கான தனது கணிப்பைக் கூறியுள்ளார்.
370வது சட்டப்பிரிவின் பின்னணியில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் 370 என்ற எண்ணிக்கையை நரேந்திர மோடி குறிப்பிட்டார், 370வது சட்ட பிரிவை பாஜக நீக்கியது. இதனால் பாஜக தனியாக 370 இடங்களைப் பெறும் என்று மோடி நம்புகிறார். சில இடங்களில் என்டிஏ 400 ஐத் தாண்டும் என்றும் மோடி கூறினார். அவர் உரையாற்றிய பல பேரணிகளில் 370 இடங்கள் இலக்கு என்று போஸ்டர்கள் வைக்கப்படுகின்றன.
ஆனால் இது சாத்தியம் இல்லை. வங்காளத்தில் பா.ஜ.க, சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில், பா.ஜ.க, முதல் முறையாக, இரட்டை இலக்கத்தை எட்டக்கூடும். தெலுங்கானாவிலும், பா.ஜ.க, சிறப்பாக செயல்படும். ஆனால் 370 இடங்கள் என்பது சாத்தியம் இல்லை.

சில விவகாரங்கள் ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால் பிரச்சனைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பா.ஜ.க. மேற்கு வங்காளத்தில் அதிக இடங்களை பிடிக்கும். பல மாநிலங்களில் பாஜக ஆச்சர்யம் அளிக்கும் இடங்களை பிடிக்கும்.
2024 தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றால், எந்த ஜனநாயக அமைப்புகள் இருந்தாலும், அது மேலும் பலவீனமடையும், எந்தவொரு நபரும் அல்லது ஒரு குழுவும் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும்போதெல்லாம், சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்பு நாசம் செய்யப்படுகிறது, இந்திரா காந்தியின் காலத்தில் இப்படித்தான் நடந்தது. இந்தியா சீனாவாக மாறாது, ஆனால் எதேச்சதிகார ஆட்சியின் அடையாளங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். 15 மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன .
அப்படி இருக்க மொத்தமாக நாடு சீனா போல மாறாது. 2024ல் பாஜகவிற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 370 இடங்களைப் பெறுவது சாத்தியமில்லை என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications