போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும்.. அதைப்பற்றி கவலைப்படக்கூடாது! ஆளுநர் ஆர்என் ரவி
சென்னை: போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும், அதைப்பற்றி கவலைப்படக்கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்விகள், சந்தேகங்களை எழுப்புகின்றனர். போர் என்றால் சில இழப்புகள் இருக்கத்தான் செய்யும். அதைப்பற்றி கவலைப்படக்கூடாது என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலால், கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானினின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மீது இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் சேதம் அடைந்தன.
இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் மொத்தமாகச் சரணடைந்தது. தொடர்ந்து சண்டை நிறுத்தத்திற்கு இறங்கி வந்தது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையின் போது, இந்தியாவுக்கும் சில இழப்புகள் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
அதேநேரம் அது தொடர்பாக இந்திய ராணுவம் எந்தவொரு தகவலையும் கூறவில்லை. இந்த சூழலில்தான் சிங்கப்பூரில் இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைவிட, அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதே கவனிக்க வேண்டியது என்று நான் நினைக்கிறேன்" என்றார். மேலும், இந்தியா பாதுகாப்புப் படையின் 6 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் கூறிய வரும் நிலையில், அது முழுமையாகத் தவறான தகவல் என்பதை அனில் சவுகான் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த நிலையில்தான், போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறுகையில், "ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்விகள், சந்தேகங்களை எழுப்புகின்றனர். போர் என்றால் சில இழப்புகள் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றி கவலைப்படக்கூடாது" என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications