ஒரிஜினல் பத்திரம் தொலைஞ்சு போச்சா? நகல் பத்திரத்தில் சொத்து வாங்கறீங்களா? வில்லங்கம் மட்டும் கூடாது
சென்னை: சொத்து நமக்குரியது என்பதை நிரூபிக்கக்கூடிய மிக முக்கியமான ஆதாரம் ஆவணங்கள்தான்.. அந்த ஆவணங்களில் பெயர், விவரம் அல்லது எல்லை தொடர்பான ஏதேனும் பிழை இருந்தால், நமது உரிமையே கேள்விக்குறியாக மாறும் அபாயம் உள்ளது.. அதனால் அசல் ஆவணங்களான பட்டா, பத்திரப்பதிவு அல்லது பிற அரசு சான்றிதழ்களில் பிழைகள் இருந்தால், அவற்றை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகுவது மிகவும் அவசியமாகும்.
ஆவணங்களில் உள்ள பிழைகளை தாமதிக்காமல் சரிசெய்வது, எதிர்காலத்தில் சொத்து விற்பனை அல்லது வாரிசுரிமை மாற்றத்தின் போது தேவையற்ற சிக்கல்கள் மற்றும் அலைச்சல்களைத் தவிர்க்க உதவும்..

நகல் பத்திரங்கள்
எப்போதுமே நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தின் மூலம் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.. சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்த ஒப்பந்த விவரங்கள், ஒப்பந்த தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தன்மை போன்ற கிரயப் பத்திரம், கடன் பத்திரம், ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்ட அனைத்தும் இதில் இடம்பெறும்..
அதுமட்டுமல்லாமல் சொத்தின் மதிப்பு, சொத்தை வழங்குபவர் மற்றும் வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண் போன்ற முக்கிய தகவல்களும் இதில் இருக்கும்.. அந்தச் சொத்து அடமானமாக வைத்து கடன் எடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது பவர் ஆஃப் அட்டார்னி வழங்கப்பட்டிருந்தாலோ, அவற்றையும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் அறிந்து கொள்ள முடியும்..
சில நேரங்களில் அசல் ஆவணம் இல்லாமல் நகல் ஆவணங்களை வைத்து சொத்தை விற்க முயற்சிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில் நகல் ஆவணங்களை மட்டும் வைத்து எந்த முடிவும் எடுக்கக் கூடாது..
ஒரிஜினல் பத்திரம் - அசல் ஆவணங்கள்
அசல் ஆவணம் உண்மையிலேயே தொலைந்ததா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.. ஏனெனில் சில தகவல்கள் வில்லங்கச் சான்றிதழில் கூட இடம்பெறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.. குறிப்பாக, அசல் ஆவணங்களை வங்கியில் வைத்து கடன் எடுத்திருக்கலாம் என்பதால், அந்த விவரங்களையும் தெளிவாக சரிபார்ப்பது மிகவும் அவசியமாகிறது..
மேலும், சொத்தை விற்பவர் வழங்கும் ஆவணங்களையும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் நகல் ஆவணங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.. இரண்டிலும் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளனவா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும்.. குறிப்பாக சர்வே எண் மற்றும் பதிவு விவரங்கள் போன்ற முக்கிய அம்சங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்..
நிலம் சொத்துக்கள்
அதேபோல பத்திரத்தில் உள்ள கையொப்பங்களையும் கவனமாக சரிபார்ப்பது மிகவும் அவசியம்.. ஏனெனில் சில நேரங்களில் முழு ஆவணமே போலியாக இருக்கக்கூடிய அபாயமும் உள்ளது.
நிலம் வாங்கியதற்கு பத்திரங்கள் எழுதப்படும்.. இந்த பத்திரங்களில் எழுத்துப்பிழைகள் இருந்தால் அதை உடனே திருத்தி கொள்ள வேண்டும்.. இதனை பிழை திருத்தல் பத்திரம் மூலம் சரிசெய்ய முடியும்..
இது பெரிய சட்ட சிக்கல்களை உருவாக்காததாக இருந்தாலும், ஏற்கனவே பதிவு செய்த அதே நபர்கள் முன்னிலையில் இந்த திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.. ஒருவேளை நிலத்தின் அளவு அல்லது உரிமையில் பெரிய மாற்றங்கள் இருந்தால், புதிய திருத்த பத்திரம் பதிவு செய்யப்பட்டு, அது வில்லங்க சான்றிதழில் சரியாக பிரதிபலிக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்..
நத்தம் நில வரித் திட்ட பிழைகள்
வருவாய்த்துறை ஆவணங்களான பட்டா, சிட்டா போன்றவற்றில் பிழைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை அணுக வேண்டும்.. தற்போது ஆன்லைன் மூலமாகவும் இத்தகைய திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதி உள்ளது..
நத்தம் நிலவரித் திட்டப் பிழைகள் அல்லது நில அளவை தொடர்பான முரண்பாடுகளைச் சரிசெய்ய முறையான ஆதாரங்களுடன் மனு அளிக்க வேண்டும்.. ஆவணங்களில் உள்ள சிறு பிழையைக்கூட அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் சரிசெய்வது, வருங்காலத்தில் வாரிசுரிமை மாற்றங்கள் அல்லது அவசரத் தேவைக்குச் சொத்தை விற்பனை செய்யும்போது ஏற்படும் தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்கும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications