"வந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை".. என்ன சிம்ரன் இதெல்லாம்.. நீயாம்மா இப்படி!
சென்னை: "வந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை" என்று இந்த டிக்டாக் செய்யும் இந்த பெண்ணை பலரும் திட்டி வருகின்றனர்.. "ஏம்மா.. லவ் பெயிலியர்னு சொன்னியே? அது இதுதானா.. என்ன சிம்ரன் இதெல்லாம்.." என்று கேட்டு நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
"காதல் தோல்வி ஆண் பெண் இருவருக்குமே ஒன்றுதான்...!ஆண்கள் மறைத்து வாழ்கிறார்கள்...!பெண்கள் மனதால் மரணித்து வாழ்கிறார்கள்..!" என்று எங்கோ படித்த ஞாபகம்.. இது 100 சதவீதம் உண்மை! எத்தனையோ பேருக்கு காதல் வெற்றியாகவும், ஊக்கியாகவும் இருக்கிறது.. என்றாலும் ஒருசிலருக்கு தோல்வியில் முடிந்துவிடுகிறது.
அந்த தோல்வியானது அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி கொண்டுபோகும்.. பெரும்பாலும் மனசில் சுமந்து கொண்டு வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு தயாராகிவிடுவார்கள். ஆனால், காதல் தனி விதம்.. புது விதம்.. அது மாசு மருவற்றது என்பதை இளம்பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு வெளிப்படுத்தினார்.. இவர் யார் என்று இன்னமும் தெரியவில்லை.

காதல் தோல்வி
அந்த வீடியோவில், யாரோ அவரிடம் பேட்டி எடுக்கிறார்கள்.. அப்போது அந்த பெண், தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், இன்னொரு பெண்ணுடன் சென்றுவிட்டது குறித்து பேசுகிறார். அவரை யாராவது ஒருத்தர் நல்லபடியா பார்த்து கொண்டால் அதுவே போதும் என தன்னை ஏமாற்றிய காதலரை விட்டுக்கொடுக்காமல் சொன்னார்.

லவ் பண்ணிட்டேன்
"இப்பதான் லவ் பண்ணி கல்யாணம் முடிச்சேன்... ஆனால் அவர் இன்னொருத்திகூட போயிட்டாரு. நான் லவ் பண்ணி சும்மா இப்படி நின்னுட்டு இருக்கேன்.. கல்யாணமும் முடிச்சி.. ஆனா வெளியில பார்த்தா தெரியாது, உள்ளுக்குள்ள நான் நிறைய கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.. ஆனால் நான் இருக்கேனா இல்லையான்னு கூட கேட்கிறது இல்லை.. என்னை திடீர்னு வேண்டாம்னு சொல்லிட்டாரு... நல்லா இருந்தா சரிதான்.. நான் மனசார லவ் பண்ணிட்டேன்.. அவர் யார்கூட இருந்தாலும் நல்லா இருன்னு சொல்லிட்டு விலகிட்டேன்.. அது ஒன்னு போதும் எனக்கு.. அவரை நல்லா பார்த்துக்கிட்டா போதும் யாருன்னாலும்!!" என்று தெரிவித்திருந்தார்.

பாசிட்டிவ் பேச்சு
இந்த பெண்ணின் பேச்சில் வெகுளித்தனம் நிறையவே வெளிப்பட்டது.. சிரித்து கொண்டே தன் வலிகளை இப்படி பகிர்ந்து கொண்டார்.. அதுமட்டுமல்ல, தோல்வி, இழப்பைகூட பாசிட்டிவ்வாகவே எதிர்கொண்டதால் ஏராளமானோர் இவருடைய இந்த டிக்டாக் வீடியோவை ஷேர் செய்தனர். "போலீஸ் ஸ்டேஷன் போய் சட்டையை புடிச்சு, அவன அடிச்சி இழுத்துனு வர காலத்துல இப்படி ஒரு பெண், நீ கடவுள் மா.. ரொம்ப தைரியமான மனசு...கவலை படாதே அவன விட்டுட்டு அவ ஓடி போய்டுவா, சத்தியமா திரு(ம்பி)ந்தி வ௫வான்.. கவலை வேண்டாம்" என்று இந்த பெண்ணுக்கு ஆதரவு கமெண்ட்களும் குவிந்தன.

டிக்டாக் பிரியை
அளவுக்கு மீறி இந்த பெண் பரிதாபத்தை பெற்றுவிட்டதால், இவர் யார் என தேடும் முயற்சியில் சோஷியல் மீடியா நபர்கள் இறங்கிவிட்டனர்.. அதன்படியே இவரது வேறு சில வீடியோக்களையும் கண்டுபிடித்து விட்டனர்.. இவர் ஒரு டிக்டாக் பிரியை போலும்.. சினிமா பாட்டுக்களுக்கு வாயசைத்து, நிறைய வீடியோக்களை பதிவிட்டுள்ளார். "வந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. ஒருத்தனையும் நம்ப முடியல.. என்று இவர் சிரித்தபடியே வாயசைத்து பாடுகிறார்.. அதேபோல இன்னொரு வீடியோவில் ஒரு தெருவில் வேகமாக ஓடிவந்து குதிக்கிறார்.. எதற்காக என்று தெரியவில்லை.

கமெண்ட்கள்
ஆனால் எல்லா டிக்டாக் வீடியோவிலும் பக்கத்திலேயே இவரது தோழி உள்ளார்.. அவரும் வாயசைத்து டிக்டாக் செய்கிறார்.. இவர் வசனம் பேசினால், அவர் மண்டையை ஆட்டி, முகபாவனைகளை செய்கிறார்.. இதையெல்லாம் பார்த்த சிலர், காதல் தோல்வி அடைந்த பெண்ணை திட்ட ஆரம்பித்துள்ளனர்.. "ஏம்மா இப்படி இருந்தா யாருதான் விட்டுட்டு போக மாட்டான்" என்றும் "இப்படி ஆட்டம் போட்டால் ஓடிடாமல் என்ன செய்வாங்க" என்றும் கமெண்ட்களை எதிர்மறையாக பதிவிட்டு வருகின்றனர்.

வைரல் வீடியோக்கள்
எனினும், ஒருவகையில் இந்த வீடியோக்களையும் பாசிட்டிவ் அப்ரோச்-ஆகவே நாம் எடுத்து கொள்ளலாம்,.. தன் சோகத்தை மறைக்க, அல்லது துக்கத்தில் இருந்து மீள்வதற்காககூட இந்த பெண் டிக்டாக் வீடியோ செய்திருக்கலாம்.. அது அவரது உரிமையும் கூட.. முதலில் டிக்டாக் செய்வது ஒன்றும் அப்படிப்பட்ட பாவமான, இழிவான காரியம் இல்லை.. அப்படி பார்த்தால் டிக்டாக் செய்யும் பெண்கள் எல்லாம் குறை சொல்வதாகவே அமையும்.. ஒரு டிக்டாக் வீடியோவை வைத்து ஒட்டுமொத்தமாக ஒருவரின் குணநலன்களை முடிவு செய்துவிட கூடாது.. எதுவுமே நாம பார்க்கிற கண்ணோட்டத்தில் தான் உண்டு!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications