தமிழகத்தில் மேலும் 200 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை தொடங்கியது.. கிலோ எவ்வளவு?
சென்னை: தமிழகத்தில் மேலும் 200 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்கிறார்கள்.
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பெய்த பருவமழையால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து சந்தைக்கு வரவிருந்த தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால் தக்காளியின் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது.
தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ 180 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வியாபாரிகள் கூறுகையில் தினமும் மார்க்கெட்டிற்கு 1200 டன் தக்காளி கொண்டு வரப்படும்.

ஆனால் தற்போது 300 டன் மட்டுமே வந்துள்ளது. கிட்டதட்ட 4 மடங்கு குறைவு. இதனால் இதன் விலை ஏற்றப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தக்காளி விற்பனை ரூ 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக கடும் பிரச்சினையை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர கடந்த சில தினங்களாக தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ 60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் 200 ரேஷன் கடைகளை சேர்த்து மொத்தம் 500 ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கடைக்கு 28 கிலோ தக்காளிகள் கொண்டு வரப்படுகிறது. அவை ஒரு கிலோ வீதம் முதலில் வரும் வாடிக்கையாளர்கள் 28 பேருக்கு கொடுக்கப்படுகிறது. கிலோ ரூ 60 க்கு விற்பனையாகிறது.
இதற்காக நேற்றைய தினம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இன்று தக்காளியின் விலை ரூ 10 உயர்ந்து ரூ 190 க்கு விற்பனையாகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications