உயரே எகிறும் மின்கட்டணம்.. சட்டென மின்வாரியம் எடுத்த முடிவு.. இனி கரண்ட் பில் இப்படித்தானாம்.. அதிரடி
சென்னை: தமிழக மின்சார வாரியம் அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இதனால், பொதுமக்களுக்கு ஒருவித நிம்மதி பிறந்துள்ளது.
பொதுமக்களின் நன்மைக்காக, தமிழக மின்துறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது. அந்தவகையில், மின்சார வழங்கல் விதிகளிலும் பல்வேறு திருத்தங்களை செய்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2 நாட்களுக்கு முன்புகூட ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருந்தது.

மின்மாற்றிகள்: வழக்கமாக, புதிய மின் இணைப்புகள் வேண்டுமானால், 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.. இவைகளில், மின்கம்பம் இணைப்பு என்றால் 60 நாட்களுக்குள்ளும், 90 நாட்களுக்குள் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என்றும் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
இனிமேல், இந்த அளவுக்கு கால அவகாசம் கிடையாதாம்.. புதிய மின் இணைப்புகளை 7 நாட்களுக்குள்ளாகவே வழங்க வேண்டும் என்றும், மீட்டர் பொருத்தாமல் புதிய மின் இணைப்புகளை வழங்கக்கூடாது மற்றும் மின்சார வழங்கல் விதிகளிலும் பல்வேறு திருத்தங்களை செய்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
என்ன காரணம்: இதற்கு காரணம், தற்போது, புதிய மின் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே மொத்தம் 2 லட்சத்துக்கும் மேல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.. நாளுக்கு நாள் புதிய மின் இணைப்புகள் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்பதால், 7 நாட்களுக்குள்ளாகவே புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், பொருத்தாமல் புதிய மின் இணைப்புகளை வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது..
இந்நிலையில், டிரான்ஸ்பார்கள் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, விவசாயத்துக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தில் மின்இழப்பு, மின்தடை ஏற்படுவதை தடுப்பதற்காகவே, குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகளை நிறுவ மின்வாரியம் முடிவு செய்துள்ளதாம்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் சொல்லும்போது, "பொதுவாக, வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு தொழிற்சாலைகளுக்கு500கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன.. ஒரு மின்மாற்றியில் குறைந்தபட்சம் 500 இணைப்புகள் தரப்படுகின்றன. இதனால், மின்விநியோகத்தில், குறிப்பாக விவசாயத்துக்கான மின்விநியோகத்தின்போது மின்இழப்பு ஏற்படுவதோடு, அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது.
மின்மாற்றிகள்: இதற்கெல்லாம் காரணம், அதிக திறன் கொண்டமின்மாற்றிகளை பயன்படுத்துவதுதான்.. இப்போது, 63 கிலோவாட், 100 கிலோவாட், 250கிலோவாட், 500 கிலோவாட் திறன்கொண்ட 4.07 லட்சம் மின்மாற்றிகள் உள்ளதால், தமிழக மின் வாரியத்தின் மின்இழப்பு 13 சதவீதமாக இருக்கிறது..
ஆனால், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 4 கிலோவாட், 10 கிலோவாட் என குறைந்த திறன்கொண்ட மின்மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன.. அதுபோலவே, நம்முடைய தமிழகத்திலும், 16 கிலோ வாட், 25 கிலோவாட் என குறைந்த திறன் கொண்டமின்மாற்றிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்மாற்றிகளின் திறனை குறைப்பதால், மின்இழப்பு 10 சதவீதமாக குறையும்.
டபுள் குஷி: அதுமட்டுமல்ல, 500 கிலோவாட் மின்மாற்றியை நிறுவ ரூ.4 லட்சம் வரை செலவாகிறது. குறைந்த திறன் மின்மாற்றிகளை நிறுவுவதால் செலவும் மிச்சமாகும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். மின்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications