2 நாள்தான்.. வடதமிழ்நாட்டை நெருங்கும் அந்தமான் காற்றழுத்த தாழ்வு பகுதி.. மேலும் வலிமை அடையுமா?
சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்று வருகிறது . இதனால் வட தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் தீவிர மழை பெய்து வந்தது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி காரைக்கால் -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது.
இதனால் வட தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்தது. இதையடுத்து மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

எங்கே சென்றது
இந்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது. சனிக்கிழமை இரவில் உருவான இந்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வடமேற்கு திசையில் சென்று வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டது. தற்போது இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து வருகிறது.

வலிமை
கணக்குப்படி இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாற வேண்டும். பின்னர் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாற வேண்டும். ஆனால் தற்போது அரபிக்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இந்த தாழ்வு பகுதி காரணமாக இந்திய பெருங்கக்கடலில் காற்றின் திசை மாறும்.

மாற்றம்
இதன் காரணமாக அந்தமான் கடலில் உருவாகி உள்ள தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலிமை பெறாது. வெறும் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மட்டுமே வலுப்பெறும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஆந்திர கடற்கரை பகுதியில் 19ம் தேதி கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

வடதமிழ்நாடு
அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவடையும். நவ.18-ஆம் தேதி -வடதமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும். இதனால் வடதமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்யும். ஆனால் சென்னையில் இதனால் கனமழைக்கு வாய்ப்பு குறைவு. இன்று அடுத்த ஓரிரு மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications