இரவோடு இரவாக மாறிய ரூல்ஸ்.. சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு பெரிய ட்விஸ்ட்.. 2 முறை மாற்றம்
சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் முன்பதிவு விதிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது: மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி காரணமாக காத்திருப்பு காலம் 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் சமையல் எரிவாயுவை பதுக்குவதைத் தவிர்க்கவும், அனைவருக்கும் சமமாக எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யவும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மறுமுறை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச காத்திருப்பு காலத்தை நேற்று 15ல் இருந்து 21 நாட்களாக உயர்த்தப்பட்டதை, இரவோடு இரவாக 25 நாட்களாக அரசு உயர்த்தியுள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசலுக்கு வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ளது. தற்போது வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால், எல்லாமே தடைபட்டுள்ளது. ஹார்மூஸ் முனையை ஈரான் மூடியதே எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

25 நாட்களாக உயர்வு
உலகத்தின் எரிவாயு விநியோகத்தின் இதயத்திலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மொத்த உலகமும் கச்சா எண்ணெய் கிடைக்காமல் அல்லாடுகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போர் தொடரும் வரை தட்டுப்பாடு இருக்கும் என்பதால், இந்தியாவில் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மறுமுறை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச காத்திருப்பு காலத்தை 25 நாட்களாக உயர்த்தி உள்ளது.
130 டாலர் விதி
அரசு வட்டாரங்கள் இது தொடர்பாக கூறும் போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 130 டாலரைத் தாண்டாத வரை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 100 டாலர் அளவிலேயே நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி
நாட்டின் எந்தப் பகுதியிலும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும், விநியோகம் சீராக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஏற்படும் விநியோகத் தடைகளைத் தவிர்க்க, இந்தியா மாற்றுப் பாதைகள் மூலம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை வேகப்படுத்தியுள்ளது.
நெருக்கடியை சமாளிக்கிறோம்
நாட்டில் போதுமான அளவு விமான எரிபொருள் இருப்பு உள்ளது. இந்தியா விமான எரிபொருளை உற்பத்தி செய்வதோடு ஏற்றுமதியும் செய்வதால், இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. இந்தியாவின் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகத் தயார்நிலை குறித்து அறிந்துகொள்ள பல நாடுகள் இந்தியாவை தொடர்பு கொண்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு விளக்கம்
இதனிடையே பெட்ரோலிய துறை அமைச்சர் நேற்று இரவு வெளியிட்ட பதிவில் கூறுகையில், "தற்போதைய புவிசார் அரசியல் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், அந்த கூடுதல் உற்பத்தியை உள்நாட்டு சமையல் எரிவாயு பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓட்டல்களுக்கு கிடைக்குமா
வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளித்துள்ள மத்திய அரசு, எரிவாயு பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தவிர்க்க இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடைப்பட்ட காலத்தை 25 நாட்களாக மாற்றியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி எரிவாயு மூலம் கிடைக்கும் வணிக ரீதியிலான விநியோகத்தில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய பொதுத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் இதர தொழிற்சாலைகளுக்கு எல்பிஜி விநியோகம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய, எண்ணெய் நிறுவனங்களின் மூன்று செயல் இயக்குநர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications