தமிழகம் விரைவில் தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும்.. மா சுப்பிரமணியன் நம்பிக்கை
சென்னை: தமிழகம் விரைவில் தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி வளாகத்தில் 120 படுக்கைகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னையில் முதல் மையம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னையில் முதல் மையமாக120 படுக்கைகளுடன் கூடிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 இடங்களில் யோகா மற்றும் இயற்கை கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

50 இடங்கள்
மேலும் 3 வார காலத்தில் 50 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மக்களிடையே கொரோனா சிகிச்சைக்கு சித்தா மற்றும் இயற்கை மருத்துவ வழிமுறைக்கு வரவேற்பு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை
மேலும், தமிழகம் விரைவில் தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும். தமிழகத்தில் 269 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. துவக்க காலத்தில் பணிச்சுமை காரணமாக பரிசோதனை முடிவு வெளியாவதில் தாமதமானது. கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதில் தற்போது பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளி வருகிறது.

தாமதம்
எங்கேனும் பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் புகார் தெரிவித்தால் சரி செய்யப்படும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முன்கள பணியாளர்களை பாராட்டும் வகையில் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வர்
மருத்துவ பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கோவையில் நேற்று முதலமைச்சர் பிபிஇ கிட் அணிந்து கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் இடத்திற்கு சென்றார். தமிழகம் முழுவதும் போதுமான ஆம்பூலன்ஸ்கள் உள்ளது. சென்னை மாநகராட்சியின் கார் ஆம்பூலன்ஸ் திட்டத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications