தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி
சென்னை: தவெக பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததற்கு திமுக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் தமிழக அரசுக்கும் என்ன சம்பந்தம்? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக விஜய் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அதேசமயம் அவர் தன் பிரச்சாரத்தையும் தொடங்க இருக்கிறார். இன்று சென்னையின் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

தவெக தலைவர் விஜய், இன்று பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தேர்வு செய்த இடம் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்தது. வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.
பெரம்பூர் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு திமுக அரசுதான் காரணம் என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்து இருந்தார். விஜய் பிரசாரம் மேற்கொள்ள கோரிய இடத்துக்கு, காவல்துறை பரிந்துரைக்காததால் அனுமதி மறுக்கப்பட்டது என பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.கீதா தெரிவித்துள்ளார்.
முல்லை நகர் சந்திப்பில் சிறிய அளவிலான தெருமுனைப் பிரசாரம் நடத்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தவெக சார்பிலான மனுவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என்றும், பிரசார தெருமுனைக் கூட்டத்துக்கு தவெக சார்பில் வேறு இடம் தேர்வு செய்து மனு அளித்தால் பரிசீலிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது என தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் தவெக குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "பொதுக்கூட்டம், பிரசாரம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே. பிரசாரத்திற்கு அனுமதி பெறும் முறை இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. 48 மணி நேரத்துக்கு சுவிதா இணையதளத்தில் விண்ணப்பித்தால் வேட்பாளர்கள் யாருக்கு வேண்டுமானாலும் அனுமதி கிடைத்துவிடும்.
சென்னை மாநகராட்சியில் நேரடியாக சென்று கடிதம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரசாரத்திற்கு அனுமதி பெறுவது எப்படி என அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தவெக பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததற்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக்கொள்ள முடியும்?
அனுமதி பெற்ற பிறகு ஏதேனும் இடங்களில் அரசு அதிகாரிகள் தொல்லை கொடுத்துள்ளார்களா என கேட்டுச் செல்லுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications