Exclusive: ச்சீ.. டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லாத.. மாங்காடு மாணவியின் இன்னொரு கடிதம்- முக்கிய க்ளூ
சென்னை: பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாங்காடு மாணவியின் கடிதம் ஒன்று ஏற்கனவே கைப்பற்றப்பட்ட நிலையில் அதன் இன்னொரு பாதியும் தற்போது வெளியாகி உள்ளது. தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து அந்த மாணவி மறைமுகமாக இதில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை மாங்காட்டில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட அந்த 11 வகுப்பு மாணவி தனது மரணம் குறித்து உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார். அதில் எனக்கு அந்த கனவு வந்து போகிறது. மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் கூட பாதுகாப்பான இடம் கிடையாது. கருவறையும், கல்லறையும்தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடம்.
பாலியல் அத்துமீறல்களை நிறுத்துங்கள் என்று கூறி தனது கஷ்டங்களை எழுதி இருக்கிறார். எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை, என்று அந்த மாணவி இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விரிவான கடிதம்
இந்த நிலையில் தற்போது போலீசார் வசம் சிக்கியுள்ள இன்னொரு கடிதத்தில் அந்த மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து இன்னும் விரிவாக எழுதி உள்ளார். அதில், எனக்கு வாழவே பிடிக்கல, இது மோசமான சமூகம். ஏன் இப்படி கடவுள் படைத்து இருக்கிறார். நான் கஷ்டப்பட வேண்டும் என்றே கடவுள் என்னை படைத்து இருக்கிறார். எனக்கு என்னை பார்த்தாலே வெறுப்பாகிறது.

படிக்க முடியவில்லை
ச்சீ...என்னோட உடலை யூஸ் பண்றாங்க. என்னால் படிக்க முடியல. அந்த நினைப்பு மண்டையில் ஓடிக்கிட்டே இருக்கு. எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்லை. வெளியே சொன்னால் என்னைத்தான் தப்பா பாக்குறாங்க. இனிமே யாருமே தப்பான எண்ணத்தில் பெண்களை தொட கூடாது. எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.

உறவினர்கள் மாங்காடு மாணவி
முதலில் யாரையும் நம்பாதீங்க. முக்கியமா உறவினர்களை நம்பாதீங்க. யாரு இப்படி பண்ணாங்கன்னு எனக்கு தெரியும் - பொண்ணுன்னு கூட பார்க்காம - நீ என்னை தொட்டு இருக்கிறாய். கண்டிப்பாக உன்னை சும்மா விட மாட்டேன். உன்னை எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன் என்று சொல்ல கூடாது.

நீ இருக்க கூடாது
நீ எல்லாம் இருக்கவே கூடாது. கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார் என்று அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். முந்தைய கடிதத்தில் உறவினர்கள், பள்ளி என்று எதுவும் பாதுகாப்பு இல்லை என்று அந்த மாணவி குறிப்பிட்டு இருந்த நிலையில், இந்த கடிதத்தில் பொண்ணு வயது என்றும் பார்க்காமல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் மீது குற்றம்சாட்டி உள்ளார்.

டீச்சரின் மகன்
அதோடு அந்த நபரின் தந்தை ஒரு ஆசிரியர் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். "டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லாத" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த மாணவியின் உறவினர்களில் ஆசிரியரின் மகன்கள் யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. உறவினர்களில் யாரேனும் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அதே சமயம் உறவினர்கள் தரப்பு மட்டுமின்றி பள்ளியிலும் மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications