சமையல்காரர்கள்ன்னா பனியன், லுங்கி, துண்டோடதான் இருக்கணுமா.. மாதம்பட்டி ரங்கராஜின் உருக்கமான பின்னணி
சென்னை: சமையல்காரர்கள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தோற்றத்தை மாற்றிக் காட்டியவர் மாதம்பட்டி ரங்கராஜ்.
குக்கிங் உலகில் கொடி கொட்டி பறந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். 1983ஆம் ஆண்டு ரங்கராஜின் தந்தை தங்கவேலு கேட்டரிங் கொழிலை தொடங்கினார். தங்கவேல் என்ற தனியொருவரால் ஆரம்பித்த இந்த கேட்டரிங் இன்று 2000 ஊழியர்களுடன் ஆலமரம் போல் வளர்ந்துள்ளது.

இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நானும் கல்லூரி முடித்துவிட்டு எங்கள் குடும்பத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என விரும்பினேன். என் அப்பாவுடன் சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதிலும் மகர ஜோதியை விடமாட்டேன்.
நான் அவ்வாறு மலைக்கு செல்லும் போது என்னுடன் முரளிதரன் என்ற நண்பர் வருவார். அவருக்கு போட்டோ எடுப்பதில் ஆர்வம் அதிகம், ஒரு முறை யதார்த்தமாக என்னை அவர் போனில் போட்டோ எடுத்துவிட்டு என்னை போட்டோஷூட் செய்யலாம் என்றார்.
நானும் விதவிதமாக காஸ்டியூம் போட்டு போட்டோ எடுத்த நிலையில் தனுஷ் நிறுவனத்தில் புதுமுக நடிகர்கள் தேவை என விளம்பரம் வந்தது. அதை பார்த்துவிட்டு வந்ததுதான் மெஹந்தி சர்க்கஸ் என்ற படம். சமையலுக்கு நான் பயன்படுத்துவது சிறுவாணி தண்ணீர்தான். அது போல் மளிகை சாமான், காய்கறிகள் உள்ளிட்டவைகளையும் நாங்களே கொண்டு சென்றுவிடுவோம்.
இதெல்லாம்தான் ருசிக்கு காரணம் என்பது எனது நம்பிக்கை. அது கண் கூட பலர் கூறியும் கேட்டிருக்கிறோம். நான் வேதாரண்யத்தில் சமையல் செய்ய போயிருந்தேன். அப்போது அங்கு சமையல் செய்யும் தம்பதி வந்திருந்தனர். அவர்கள் என் சமையலை சாப்பிட்டுவிட்டு மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் தங்களுக்கு இருக்கும் ஒரே மகனை சமையல் தொழிலில் விட்டால் பெண் கொடுக்கமாட்டார்களோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் உங்களை பார்த்ததும் இப்படியெல்லாம் ஹைடெக்காக யோசிக்கலாமா என்று தோன்றுகிறது. அதனால் எங்கள் மகனை சமையல் தொழிலில் அனுப்பி பெரியாளாக்குவோம் என்றனர்.
நான் பலரை பார்த்து இன்ஸ்பயர் ஆகி இருக்கேன். என்னை பார்த்து சிலர் இன்ஸ்பயர் ஆனதாக சொல்லும் போது நிஜமாகவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மலேசியாவில் அடுத்த மாதம் ஒரு திருமணம், அதற்கு கப்பல் மூலம் சிறுவாணி தண்ணீர் அனுப்பியுள்ளோம். சமையல் செய்பவர்கள் எப்போதும் பனியன், லுங்கி, துண்டு அணிந்திருப்பார்கள் என்ற லுக்கை நான் மாற்றிக் காட்டினேன்.
நான் சமையல் செய்ய ஒரு ஆடை அணிந்திருந்தாலும் சமையலை முடித்துவிட்டு கோட் சூட், புத்தாடை என உடுத்திக் கொள்வேன். இதற்கு 2 காரணங்கள் உண்டு. ஒன்று ஆள் பாதி ஆடை பாதி என்பது! மற்றொன்று சிறுவயதில் யூனிபார்ம் வாங்கவே கஷ்டமாக இருக்கும். ஆனால் எனக்கு கலர் டிரஸ் நிறைய எடுக்க ஆசை, ஆனால் எங்களால் எடுக்க முடியாது. அப்பா 1992 ஆம் ஆண்டு பிசினஸில் ஒரு நல்ல நிலையை அடைந்தவுடன் புத்தாடைகளை அணிய தொடங்கினேன். அது இன்று வரை தொடர்கிறது. இவ்வாறு மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார். இந்த கேட்டரிங் தொழிலை அவர், அவருடைய தம்பி, அவருடைய சித்தப்பா, உறவினர் என 4 பேர் சேர்ந்து செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 திருமணங்களை மட்டுமே ஒப்புக் கொள்வாராம்.












Click it and Unblock the Notifications