“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா!
சென்னை: திமுக ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடத்திய சட்ட எரிப்பு போராட்டத்தைக் கண்டித்த ஈ.வெ.ராமசாமி, அதனை பைத்தியக்காரத்தனம் என்று கண்டித்தார்.
ஹிந்தி திணிப்பின் வரலாறு 1938இல் தொடங்கியது என்றாலும், அது 1963இல்தான் மிகப் பெரிய கிளர்ச்சியாகத் தமிழ்நாட்டில் வெடித்தது. ஆனால், திமுக முன்வைத்த கோரிக்கைகளில் பல குழப்பங்கள் நிலவுவதாகக் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தனர்.
திமுக போராட்டம் பற்றி அறிக்கை வெளியிட்ட ஈ.வெ.ரா., நாடாளுமன்றத்திலும் சட்டசபையில் சட்டதிட்டங்களுக்கு தங்களை உட்படுத்திக்கொண்டு அவைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று பதவியேற்பின் போது உறுதிமொழி எடுத்துக் கொண்ட திமுக அங்கத்தினர்கள் இன்று அந்தச் சட்டத்தையே எரிக்கிறேன் என்று கூறுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனமான கூற்றாகும் என்றார்.
இச்செய்தி 'சுதேசமித்திர'னில் (18 அக்டோபர் 1963) வெளியாயிற்று. ஒருவேளை சட்டத்தை எரிப்பது என்றால் தங்களுடைய பதவி உறுதிமொழியைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவர்கள் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்த அவரது அறிக்கையில், "ஏதாவது ஒருவழியில் மக்கள் கவனத்தை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்ற கவலையால் அவர்கள் மக்களுக்கு வீதியில் மாங்கொட்டை வித்தை காட்டுவதுபோல் போராட்டம் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வித்தைக்குச் சின்ன பையன்களும் பாமர மக்களும் தான் கூட்டம் கூடுவார்கள். சிறு அறிவுள்ள எந்த மனிதனும் இதை லட்சியம் செய்யமாட்டான்.
தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பைத் தவிர்ப்பதற்கும் மத்திய அரசாங்கம் அளித்து வரும் வேறு பல இன்னல்களை நீக்குவதற்கும் தமிழ்நாடு தனி நாடாகப் பிரிவது ஒன்றுதான் சிறந்த வழியாகும்" என்றிருந்தார் அவர். சட்டமன்றம் கூடுவதற்கு முன்பாக வெளியே திமுக போராட்டம் நடத்த முடிவு செய்தது. அதற்கு அன்றைய முதல்வர் பக்தவத்சலம் கண்டனம் தெரிவித்தார்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை இருப்பதாகச் சொல்லும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஒரு சட்டம் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது பற்றிச் சட்டசபையில் அல்லவா வாதாட வேண்டும்? கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று பக்தவத்சலம் கேட்டார்.
"நாட்டின் தேசியக் கொடியும் அரசியல் சட்டமும் புனிதமானவை. இதைக் கொளுத்துவதாகச் சொல்வது குற்றமாகும். இந்த ராஜ்யத்தில்தான் இதற்காகச் சட்டம் செய்திருப்பதாக திமுக தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த ராஜ்யத்தில்தான் தேசியக் கொடியும் அரசியல் சட்டத்தையும் கொளுத்தப் போவதாகச் சொல்லக்கூடியவர்கள் இருக்கின்றனர். இது துரதிருஷ்டமானது.
மக்கள் திமுகவினருக்கு ஓட்டுப்போட்டிருக்கிறார்கள். அவர்களின் ஓட்டைப் பெற்று சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே பொறுப்புடன் நடந்துகொண்டு சட்டசபையில் பல நடவடிக்கைகளில் கலந்துகொண்டு வாதாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், சட்டசபை கூடுவதற்கு முதல் நாள் கிளர்ச்சியை வெளியில் வைத்துக்கொண்டு அது காரணமாக அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கும் படி நேரிட்டால். அது அவர்களே தேடிக்கொள்ளும் வினையாகும். பின்னர் சட்டசபையில் இருக்கமுடியவில்லை; கேளி எழுப்ப முடியவில்லை; அவசரத் தீர்மானம் கொண்டுவர முடியவில்லை என்றெல்லாம் சொல்வதில் என்ன பயன்?" எனக் கேட்டிருந்தார்.
"திமுக தலைவர்கூட பார்லிமெண்ட் அங்கத்தினர். ஜனநாயகத்தில் நம்பிக்கைக் கொண்டவர்; பார்லிமெண்டில் அல்லவா பிடிக்காத சட்டம் ஒன்றைப் பற்றிக் கிளர்ச்சி செய்ய வேண்டும்? தேசியக் கொடியை எரிப்பது குற்றமாகும் என்பதற்காகச் சட்டசபையில் சட்டம் செய்யப்பட்டபோது உறுப்பினராக இருந்த திமுக தலைவர் இச்சட்டம் அவசியமில்லை என்றுதான் கூறினார். ஆனால், அத்தகைய குற்றங்கள் நடைபெறவிருந்தால் சட்டம் செய்யத்தானே வேண்டும்?
21 அக்டோபர் 1963 அன்று மதுரை திலகர் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாதுரை சட்ட எரிப்புப் போராட்டம் ஏன் என்பதற்கு விடையளித்தார். அவர், "அரசியல் சட்டத்துக்கு உரிய மதிப்பு தர வேண்டும் என்பவர்களில் நானும் ஒருவன். அரசியல் சட்டத்தின் ஆட்சி மொழிப் பிரிவை எரிக்க நான் முற்படுகிறேன் என்றால் அது ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஏற்பட்டுள்ள ஆழ்ந்த உணர்ச்சிகளையே காட்டுகிறது. 1965 வரை ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்தப்படும் எனக் காலவரை செய்துள்ளோம். ஆனால் அதற்கு பின்பும் கிளர்ச்சி நீடிக்கக்கூடும். அதற்குள் ஆட்சி மொழியாக ஹிந்தி திணிக்கப்படும் முடிவை நேரு பரிசீலனை செய்வார் என்று நான் நம்புகிறேன்" என்றார். டிசம்பர் 15 ஆம் தேதி மதுரையில் நடக்கப்போகும் சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கேற்பவர்களின் பெயர் பட்டியலை அவர் இக்கூட்டத்தில் வாசித்தார்.
அடுத்து திண்டுக்கல்லில் பேசினார் அண்ணாதுரை. அங்கு, "காங்கிரஸ் மீது எனக்கு ஏற்பட்ட வெறுப்பு சமீபத்தில் ஏற்பட்டதல்ல. கடந்த 15 ஆண்டுகளாக நான் அதை வெறுத்து வருகிறேன்" என்றார். மதுரையில் அண்ணா பேசிய மைதானத்தின் பெயர் திலகர். திண்டுக்கல்லில் காந்தி மைதானத்தில் பேசினார். அன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள பொது இடங்களின் பெயர்கள் எல்லாம் தேசிய தலைவர்களின் பெயர்களிலிருந்தன. அதையே இச்செய்திகள் மூலம் நாம் இன்றைக்கு அறிந்துகொள்கிறோம்.
"தமிழர்களின் ஆத்திரத்தை எடுத்துக்காட்டவே நவம்பர் 17 ஆம் தேதி அரசியல் சட்ட 17 ஆவது பிரிவை எரிக்கப் போகிறோம். நான் பல முறை சிறை சென்றாலும் கவலைப்படப் போவதில்லை. விடுதலை ஆனதும் மீண்டும் சிறை செல்வேன்" என்றார். இந்தக் கூட்டத்தில் கழக கட்டிட நிதிக்காக இவரிடம் 700 ரூபாய் வழங்கப்பட்டது.
ஒரு பக்கம் காங்கிரசைக் கட்சியை வலுப்படுத்தத் தஞ்சாவூர், பழனி, வேலூர் என்று தொடர் கூட்டங்களில் பங்கேற்று காமராஜ் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று வந்தார்.
மற்றொரு பக்கம் திமுக நிறுவனர் அண்ணாதுரை சட்ட எரிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தன் தொண்டர்களை ஒருங்கிணைத்து வந்தார். 1963 ஆம் ஆண்டு தமிழகம் இரண்டு தலைவர்களின் சூறாவளி சுற்றுப் பிரச்சாரத்திற்கு இடையே சிக்கிக் கொண்டு தவித்தது. இந்தக் கால பகுதியில்தான் மு.கருணாநிதியின் கதை வசனத்தில் 'காஞ்சித் தலைவன்' வெளியானது.
அதில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார் எனத் தனியே சொல்லத் தேவையில்லை. இந்தப் படத்திற்காகக் கொடுக்கப்பட்ட ஊடக விளம்பரங்களில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது, 'காஞ்சித் தலைவன்' என்பதே அண்ணாவை அடையாளப்படுத்தியது. ஒரு பக்கம் சட்ட எரிப்பு, மற்றொரு பக்கம் சினிமா மூலம் கருத்து பரவல் என இரட்டைக் குதிரைகளில் திமுக சவாரி செய்து வந்தது.
எழுதியவர் கடற்கரய்
-
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்?












Click it and Unblock the Notifications