சென்னை மக்களே அலர்ட்.. வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ! இந்த அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு ஓடுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழைக் காலம் வந்துவிட்டாலே மெட்ராஸ் ஐ பாதிப்பு என்பது சென்னை மற்றும் புறநகரில் பரவ தொடங்கிவிடும். இந்தாண்டு வழக்கத்தை விடப் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் இதனால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படியும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த மெட்ராஸ் ஐ அறிகுறிகள் என்ன, இது எப்படிப் பரவுகிறது என்பதெல்லாம் குறித்து நாம் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் நவ., டிச. மாதங்கள் என்பது சென்னையில் பருவமழை சீசன் ஆகும். இந்த மாதங்களில் தான் சென்னை மற்றும் புறநகரில் கனமழை கொட்டும்.

madras eye


பருவமழை காலத்தில் மழை நீர் சாலையில் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் இது தொடரும்.

சென்னை பருவமழை: பருவமழையைப் போலவே சென்னையில் இந்த நவ., டிச. மாதங்களில் மற்றொரு பிரச்சினையும் வரும். அதுதான் மெட்ராஸ் ஐ. இது என்ன தான் 'மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்பட்டாலும் இதன் மருத்துவர் பெயர் கான்ஜுன்க்டிவிடிஸ் நோயாகும். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது முதலில் சென்னை, அதாவது அப்போதைய மெட்ராஸில் கண்டறியப்பட்டதாலேயே இது மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படுகிறது.

இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் அதிகரிக்கும். அதேபோல இந்தாண்டும் சென்னையில் அதிலும் குறிப்பாகக் குறிப்பாகக் குழந்தைகளிடையே மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு முன்கூட்டியே சென்னையில் மழை சீசன் அதிகரித்துவிட்ட நிலையில், வழக்கத்தை விட மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

மெட்ராஸ் ஐ: மெட்ராஸ் ஐ என்பது வேகமாகப் பரவும் ஒரு பொதுவான நோயாகும். இது பெரும்பாலும் ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கண்ணில் இருந்து வெளி வரும் நீர் மூலமாகவே இது பரவுகிறது. அதாவது மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது கண்ணைத் தொட்டுவிட்டு, வேறு எதையாவது தொடும் போது இந்த மெட்ராஸ் ஐ பரவுகிறது.

அறிகுறிகள் என்ன: கண்ணில் ஏற்படும் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், கண்ணில் இருந்து மெழுகு போன்ற ஒன்று வெளியேறுவது, சூரிய ஒளியைப் பார்த்தலே கண் அதீதமாகக் கூசுவது ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பால் சீரிஸயான பிரச்சினை பெரும்பாலும் ஏற்படாது. அதேநேரம் கார்னியா பாதிக்கப்பட்டால், மங்கலான பார்வையை ஏற்படுத்தும்.

மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் சுயமாக எல்லாம் நிச்சயம் மருந்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும், மருத்துவரிடம் செல்லாமல் மருந்தகத்தில் சென்றும் சொட்டு மருந்தை வாங்கி பயன்படுத்தக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே தேவையான மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்ம ஊரில் 90% பாதிப்பு அடினோவைரஸால் தான் ஏற்படுகிறது. இதனால் முதலாவது கண்ணில் பாதிப்பு ஏற்படும் போது அது விரைவாக இரண்டாவது கண்ணுக்கும் பரவுகிறது.

என்ன செய்ய வேண்டும்: பொதுவாக நாம் பயன்படுத்தும் துண்டுகள், தலையணை கவர்கள் மற்றும் மேக்அப் பொருட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகள் மூலமாகவே இந்த மெட்ராஸ் ஐ பரவுகிறது. எனவே, மெட்ராஸ் ஐ வந்தால் முதலில் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்களில் இருந்து வெளியேறும் நீரைத் துடைக்க டிசு பேப்பரை பயன்படுத்தலாம். இதன் மூலம் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.

கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தி வந்தால் உடனே அதை நிறுத்துங்கள். மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு புதிய லென்ஸ்களை பயன்படுத்துங்கள். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் தான் இது வேகமாகப் பரவக்கூடும். எனவே, மெட்ராஸ் ஐ பாதிப்பு முழுமையாகச் சரியாகும் வரை, அதாவது கண் சிவத்தல் அல்லது நீர் வெளியேறுதல் முழுமையாக நிற்கும் வரை மக்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+