ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை! கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
சென்னை: போலீசால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீசாரால் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி சுட்டு பிடிக்கப்பட்ட தனது கணவர் பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி, பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், துப்பாக்கிச் சூட்டில் தனது கணவருக்கு இடது காலில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டதாகவும் பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த குண்டு அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
காயம் முழுமையாக குணமடையாததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு இன்று மீண்டும் வந்தது.
அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் அதன் மீதான விசாரணையில் சரவணனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படட்டதாக அரசு கூறியதை அடுத்து அந்த மனு முடித்து வைக்கப்பட்டதாக கூறினார்.
எனவே, மீண்டும் அதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். மேலும், தண்டனை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது எனக்கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல்











Click it and Unblock the Notifications