“70,000 பேர் உங்களை நம்பினது.. இதுக்குத்தானா?” பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று கோரி கே.வி.குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, எம்எல்ஏவுக்கு நீதிபதி சரமாரியாக கேள்வியை எழுப்பியுள்ளார்.
இன்று காலை மனு விசாரணைக்கு வந்தபோது, எம்எல்ஏவையும், ஏடிஜிபி ஜெயராமனையும் நேரில் ஆஜராக நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார். மதியம் எம்எல்ஏ ஆஜராகியிருந்த நிலையில் நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.

"நீங்கள் சாதாரண நபர் அல்ல. உங்களுக்கு எதிரான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள். ஏற்கனவே, காவல்துறையும், அமைச்சர்களும் கூட்டணியாக இருக்கிறார்கள். எப்போது நீங்கள் மக்களுக்காக வேலை செய்வீர்கள்? குடிமகன்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும்போது நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்காது.
தங்களுக்கு இருக்கும் குறைகளைத் தீர்க்க உதவுவீர்கள் என்று நம்பிதான் மக்கள் உங்களிடம் வருகிறார்கள். ஆனால், பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், கட்டப்பஞ்சாயத்துகளை நடத்துகிறீர்கள். இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டால், அவர்களை திருமணம் செய்து கொள்ளட்டுமே! அதை விட வேண்டியதுதானே? திருமணத்தில் ஏதாவது சட்ட சிக்கல் இருந்தால், அதை காவல்துறை, நீதிமன்ற கவனத்திற்கு போக விடுங்கள். ஆனால் நீங்கள் மக்களை தவறாக வழி நடத்தாதீர்கள்.
மக்கள் கொளுத்தும் வெயிலில், சில சமயங்களில் உணவு கூட சாப்பிடாமல் தங்களுக்கு இருக்கும் குறைகளை தீர்த்து வைப்பார் என்று நம்பி வரிசையில் நின்று உங்களுக்கு ஓட்டு போடுகிறார்கள். ஆனால், நீங்களோ கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறீர்கள்? ஜனநாயக நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள இது சரியான நேரம். 70,000 பேர் உங்களுக்கு வாக்களித்து, நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கட்டப்பஞ்சாயத்துக்காகவா அவர்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? கிடையாது. மக்களின் வேலையை செய்வதற்காக உங்களுக்கு வாக்களித்தார்கள்.
வழக்கு தொடர்பாக விசாரணைக்காக காவல்துறை அதிகாரிகள் உங்களை அணுக முயன்றபோது, ஆதரவாளர்கள் வைத்து பலத்தை நிரூபிக்கிறீர்களா? நிலைமை இப்படியே தொடர்ந்தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒவ்வொரு ஆதரவாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டி வரும்.
கடந்த 47 வருடங்களாக நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள். நீங்கள் போலீசாருடன் அமர்ந்து, வழக்கு குறித்த விசாரணைக்கு ஒத்துழைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். ஏன் உங்கள் ஆதரவாளர்கள் இதில் வருகிறார்கள்? இதுதான் அரசியலா?" என்று கூறி முன்ஜாமீன் மனுவின் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் வழக்கை 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்திருக்கிறார். எம்எல்ஏ மீது நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ள விஷயம், அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை!












Click it and Unblock the Notifications