அடுத்த இடி.. பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்
சென்னை: சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் சர்ச்சை பேச்சை சுட்டிக்காட்டி, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஐந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதன் மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தி, விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அதனை முடித்து வைத்து விட்டதாக தெரிவித்ததை ஏற்றுக் கொண்டு அந்த வழக்கை மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், முதன்மை அமர்வு மீண்டும் அதே விவகாரத்தை எடுக்க அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், அமைச்சரின் முழுமையான பேச்சை கேட்காமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு குறித்து அமைச்சர் உள் அரங்கத்தில் பேசிய விவகாரம் தான் இது என்றும் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தின் முக்கிய சமயங்களான சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கள், இரு சமயத்தினரின் மனதை புண்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது. இந்தப் பேச்சுக்காக அவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிஷ்டவசமானது என நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வெறுப்பு பேச்சை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மூலம் சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, அதனைத் தவறாக பயன்படுத்தி இருக்கிறார் எனக்கு கூறி, வெறுப்பு பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாமாக முன்வந்து விசாரணை எடுக்கும் வழக்கை தகுந்த உத்தரவுகளுக்காக தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications