நமட்டு சிரிப்பு நமக்குது ராசா..அதிமுக 'மாஜி’ வளர்மதி சொத்துக் குவிப்பு வழக்கு- டிச.4 முதல் வாதங்கள்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் டிசம்பர் 4-ந் தேதி முதல் வாதங்களை தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரித்தார். தற்போதைய திமுக அரசின் அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதன வழக்குகளை மட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மீதான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 8-ந் தேதி விசாரணைக்கு எடுத்து கொண்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அப்போது, கீழ் நீதிமன்றங்களின் செயல்களை பார்த்தால் நீதித்துறை ஆண்டவனே காப்பற்ற வேண்டும். இப்போது என்னை வில்லனாகவே பார்க்கின்றனர். விசாரணைகளை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை எனக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை, முன்னாள் அமைச்சர் வளர்மதி பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே அமைச்சர் பொன்முடி தம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க கூடாது; தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷூக்கு நன்றி தெரிவித்தார்.
தற்போது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது அனைத்து தரப்பும் டிசம்பர் 4-ந் தேதி முதல் வாதங்களை தொடங்கலாம் என உத்தரவிடப்பட்டது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications