நர்சிங் படிப்புகளில் மூன்றாம் பாலினத்தவரை சிறப்பு பிரிவில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நர்சிங் படிப்புகளில் மூன்றாம் பாலினத்தவரை சிறப்பு பிரிவின் கீழ் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரைச் சேர்ந்த திருநங்கை தமிழ்செல்வி 12-ம் வகுப்பு தேர்வில் 74% மதிப்பெண் பெற்றிருந்தார். நர்சிங் படிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணப்பித்த போது அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் தமிழ்ச் செல்விக்கு இடம் வழங்கவும் உத்தரவிட்டது மாநில மனித உரிமை ஆணையம்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்ச்செல்வி வழக்கு தொடர்ந்தார். அதில் தம்மை திருநங்கையாக கருதாமல் பெண்ணாக கருதி இடம் வழங்கப்பட்டது; இதனால் தரவரிசையில் 280-வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் திருநங்கையாக கருதி இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் தமிழ்ச் செல்வி. இம்மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார்.
இந்த விசாரணையின் போது, தமிழ்ச்செல்வியை பெண்ணாக கருதியதால் 280வது தர வரிசை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழ்ச்செல்விக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கியிருந்தால் எளிதாக இடம் கிடைத்திருக்கும். தமிழ்ச் செல்வியை சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்க்காதது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. ஆகையால் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க மருத்துவ கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications