சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்! யார் இவர்?
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா பதவி வகித்து வருகிறார். இவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் அடுத்த சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை பரிந்துரை செய்து இருந்தது.

திரவுபதி முர்மு உத்தரவு
இது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரையை திரவுபதி முர்மு சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார். நாளை அல்லது நாளை மறுநாள் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
ராய்ப்பூரை சேர்ந்தவர்
சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஆகும். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக மத்திய பிரதேச நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2016 ஆம் ஆண்டு மத்தியபிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தான் அவர் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications