சென்னை ஐகோர்ட்டில் போலீசார் சொன்ன விஷயம்.. உடனே மன்சூர் அலிகான் மகன் துக்ளக் ஜாமீனில் விடுதலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியிருந்த நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை, கோர்ட்டில் சொன்ன தகவலை அடுத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய பகுதியில் சிலர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கடந்த நவம்பர் மாதம் ஜெ.ஜெ. நகர் பாரிசாலை இபி பூங்கா அருகே போதைப் பொருள் விற்பனைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்கிற கல்லூரி மாணவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.

mansoor ali khan police court


அப்போது அவரிடம் இருந்து 17 எல்.எஸ்.டி ஸ்டாம்ப் போதைப் பொருளும், 3 கிராம் ஓ.ஜி. கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெடிட் ஆன்லைன் செயலி மூலமாக போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியும், அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அரவிந்த் பாலாஜி (20), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல் (21), மறைமலை நகரை சேர்ந்த திரிசண் சம்பத் (20), ஆருணி (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கார்த்திகேயனிடம் ஜெ.ஜெ. நகர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கும் இவருடன் தொடர்பில் இருந்ததாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜெ.ஜெ.நகர் போலீசார், அலிகான் துக்ளக்கை டிசம்பர் 4 ஆம் தேதி கைது செய்தனர்.

அலிகான் துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தன்னிடம் இருந்து எந்த போதைப்பொருளும் போலீசார் பறிமுதல் செய்யாத நிலையில் தன்னை கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அலிகான் துக்ளக் தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணை நிலையில் இருப்பதால் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அலிகான் துக்ளக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்தது. அப்போது காவல்துறை தரப்பில், கைதான அலிகான் துக்ளக்கிடமிருந்து எந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. கைதான மற்ற நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, குற்றம் சாட்டப்பட்ட அலிகான் துக்ளக் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்ட துக்ளக் அலிகான், கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிறையில் இருந்து வருகிறார். தனது மகன் சிறைக்குச் செல்லும் முன், நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த மன்சூர் அலிகான் வேன் அருகில் காவல்துறை வாகனம் அருகில் சென்று மகனுக்கு புத்திமதி கூறி இருந்தார்.

“கஞ்சா எல்லாம் அடிக்கக் கூடாது. ஜெயிலில் நிறைய புத்தகங்கள் படி. தெம்பா, தைரியமாக இரு.. ஏன் தப்பு பண்ற, கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரெஸ்ட் பண்ணும் தெரியாதா?” என்று பேசினார். மேலும், கல்லூரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் எப்படி கிடைக்கிறது. டாஸ்மாக்கை ஒழியுங்கள் என வேண்டுகோள் வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+