Hit & Run வழக்கு ஏன் போடல? விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? நீதிபதி கேள்வி
சென்னை: தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனம் மோதி இருவர் விழுந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், இது கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் நடந்துள்ளதாக நீதிபதி செந்தில் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட்டம் கூட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி செந்தில் குமார், விஜய் பிரச்சாரம் செய்த வாகனம் இடித்து விபத்து நேரிட்டுள்ளதே, அந்த சம்பவத்தில் இடித்துவிட்டு ஓடியதாக விஜய்யின் பிரச்சார வாகனம் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? விஜய்யின் பிரச்சார வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கிய வீடியோ உள்ளது.
ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை.. அதிர்ச்சியாக இருக்கிறது.. வீடியோக்களை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் இது நடந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதனால் விஜய்யின் பிரச்சார வாகனம் இரு சக்கர வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக நீதிபதியே விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன?












Click it and Unblock the Notifications