தண்டனை கைதிகளுக்கு அவசர கால விடுப்பு வழங்க எந்த தடையும் இல்லை! ஹைகோர்ட்
சென்னை: தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் தண்டனைக் கைதிகளாக உள்ள திருகுமரன், சின்னதுரை, தங்கப்பாண்டி, ரமேஷ் மற்றும் ஜோதிமுருகன் ஆகியோர், தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இருவேறு அமர்வுகளின் மாறுப்பட்ட தீர்ப்புகள் வழங்கியதால், இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், தமிழ்செல்வி மற்றும் சுந்தர்மோகன் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு விதிகளின்படி, தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு உயர்நீதி மன்றத்திலோ அல்லது உச்ச நீதி மன்றத்திலோ நிலுவையில் இருக்கும் போது, கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசரகால விடுப்போ அளிக்க இயலுமா?
தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்கும்போது தண்டனை காலத்தை, கைது செய்யப்பட்ட நாள் முதல் கணக்கில் எடுத்து கொள்ள முடியுமா மற்றும் விசாரணைக் காலத்தில் சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள முடியுமா?
கைதிகளுக்கு விடுப்பு தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டுமா?
என கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும்போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசர கால விடுப்பு வழங்க சிறை அலுவலர்களுக்கு தடை ஏதும் இல்லை என்று வாதிட்டார்.
மேலும் சிறை தண்டனை என்பது கீழமை நீதிமன்றம், தண்டனை வழங்கிய நாளிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் எனவும் வாதிட்டார்.
இது தவிர, தண்டனை கைதிகள் மீது வேறு வழக்குகள் விசாரணையில் இருந்தால், விடுப்பு வழங்க முடியாது என்றும் விடுப்பு வழங்குவது குறித்த அனைத்து விதிகளுக்கும், விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, கைதிகளின் மேல்முறையீடு மனு உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதி மன்றத்திலோ நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என தெளிவுபடுத்தியது.
விடுப்பு வழங்க கைதிகளின் தண்டனை காலத்தை கணக்கிடும்போது, கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கிய நாள் மற்றும் தண்டனைக்கு முன் சிறையில் இருந்த விசாரணை நாட்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் எனவும் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மேலும் தண்டனைக் கைதிகளுக்கு எதிராக வேறு வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்தால், அந்த கைதி விடுப்பு பெற தகுதியில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அனைத்து விதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications