இளையராஜா இசையால் ஈட்டிய வருமானம் எவ்வளவு! கணக்கு தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜா இசையை பயன்படுத்தி வணிக ரீதியில் ஈட்டிய வருமானம் எவ்வளவு என்பதை தாக்கல் செய்யுமாறு சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எக்கோ நிறுவனம், அமெரிக்காவின் ஓரியண்டல் ரெக்கார்டிங் ஆகியவை தனது பாடல்களை தவறாக பயன்படுத்துவதாக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்தார்.

ilayaraja sony chennai

அந்த வழக்கில் "நான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 8000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். எனது இசை பணியை பாராட்டு தமிழக அரசு, மத்திய அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கி என்னை கவுரவித்துள்ளன.

எனது இசை படைப்புகள் காப்புரிமை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. எனது இசை படைப்புகளுக்கு நான் மட்டுமே உரிமையாளர். இதற்கு மற்றவர்கள் உரிமை கோரவோ அல்லது அதை பயன்படுத்தவோ அதிகாரம் இல்லை.

பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் எனது பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருகிறது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. குறிப்பாக சோனி நிறுவனம், அதன் சமூகவலைதள பக்கங்களில் எனது பாடலை மாற்றி பயன்படுத்துகிறது.

எனது அனுமதியே இல்லாமல் பல்வேறு வடிவங்களில் அதை மாற்றி பயன்படுத்துகிறது. சோனி நிறுவனம், எக்கோ நிறுவனத்திடம் இருந்து பாடல்களை வாங்கியதாக கூறினாலும் அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல் அதனை சார்ந்த நிறுவனங்கள் எனது பாடல்களை என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள்.

காப்புரிமைச் சட்டத்தின்படி எனது இசையின் முதல் உரிமை படைப்பாளியான எனக்கே முதல் உரிமை உள்ளது. நான் பாடல்களின் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை. எந்த உரிமைகளையும் மாற்றித் தரவும் இல்லை. எனவே சோனி நிறுவனம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் என்னுடைய பாடல்கள் மற்றும் அது தொடர்பான விபரங்களை மாற்றி அமைக்கவோ அதனைக் கொண்டு இசைகள் கோர்வைகளை செய்ய தடை விதிக்க தடை வேண்டும் என கோரியிருந்தார்.

மேலும் தனது பாடல்களை பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிபதி செந்தில்குமார்,
இளையராஜா இசையை பயன்படுத்தி ஈட்டிய வருமானம் எவ்வளவு என்பது குறித்த வரவு செலவு விவரங்களை தாக்கல் செய்யுமாறு சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை அக்டோபர் 22 ஆம் தேதி ஒத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+