வேலூரை உலுக்கிய துப்பாக்கி சூடு.. மச்சினியை கொன்ற சகோதரி கணவன்.. ஆயுள் தண்டனையை குறைத்த ஹைகோர்ட்
சென்னை: குடும்ப தகராறில் மனைவியின் சகோதரியை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராணி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே, மனைவி ராணியை அண்ணாமலை தினமும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராணி, தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பல மாதங்களாக அவர் தாய் வீட்டில் தங்கியிருந்ததால், ராணியை அழைத்து வருவதற்காக அண்ணாமலை சென்றுள்ளார்.

அப்போது, ராணியை அண்ணாமலையுடன் அனுப்பி வைக்க அவரது சகோதரி உமா சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கும், உமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை, தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் உமாவை நான்கு முறை சுட்டதில், சம்பவ இடத்திலேயே உமா உயிரிழந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக அண்ணாமலையை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மகளிர் நீதிமன்றம், அண்ணாமலைக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவானது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜி.சந்திரசேகரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர், அண்ணாமலை கொலை செய்ததாக கூறப்படும் காரணத்தில் உண்மையில்லை என்றும், சாட்சிகளும் முறையாக இல்லை எனவும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உமாவை திட்டமிட்டு அண்ணாமலை கொலை செய்யவில்லை என்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications