Coolie 6th day: "கூலி"க்கு என்ன அப்படி அவசரம்! சன் பிக்சர்ஸிடம் ஹைகோர்ட் நீதிபதி கோபம்
சென்னை: கூலி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்சார் குழு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் கூலி திரைப்படம் குறித்த வழக்கை அவசரமாக விசாரிக்க என்ன அவசியம் உள்ளது என நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது கடந்த 6 நாட்களில் ரூ 216 கோடியை வசூலித்துள்ளது.

இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, ஆமீர்கான், சவுபின், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஜெயிலர் படத்தை காட்டிலும் அதிக வசூலை கூலி ஈட்டியிருப்பதாக சொல்கிறார்கள்.
கூலி படத்தை பார்த்த அனைவருமே இந்த படத்தில் அந்தளவுக்கு வன்முறை இல்லையே, இதற்கு ஏன் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஜெயிலர் படத்தில் இல்லாத வன்முறையா? அந்த படத்திற்கே U/A சான்றிதழ் கொடுக்கும் போது இந்த படத்திற்கு மட்டும் ஏன் A சான்று கொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை படம் பார்த்தவர்கள் அனைவரும் முன்வைக்கிறார்கள்.
ஏ சான்றிதழ் படங்களை 18 வயதுக்குள்பட்டோர் பார்வையிட அனுமதி இல்லை. மேலும் தியேட்டர்களிலும் இது குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரில் கூலி படம் மறுதணிக்கை செய்யப்பட்டு, தற்போது பெற்றோர் அனுமதியுடன் பிள்ளைகளும் கூலி படத்தை பார்க்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் ரஜினி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் தற்போது கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ரூ 400 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் கூலி திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஏ சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குடும்பத்துடன் திரையரங்குக்கு வருபவர்கள் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் படம் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறார்கள்.
இதனால் குழந்தைகள் பார்க்க முடியாததால் பெரியவர்களும் திரையரங்கம் வரை வந்து விட்டு குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு என்றவுடன் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
எனவே ஏ சான்றிதழை கூலி படத்திற்கு ரத்து செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கை அவசர வழக்காக விசாரிக்க என்ன உள்ளது? படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆன நிலையில் தற்போது வழக்கு தொடர்ந்தது ஏன் என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications