சென்னை ஹைகோர்ட் மூத்த பத்திரிகையாளர் பி.எஸ்.எல்.பிரசாத் காலமானார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த செய்தியாளர் பி.எஸ்.எல்.பிரசாத் (வயது 65) உடல் நலக்குறைவால் காலமானார்

மக்கள்குரல், ஈநாடு உள்ளிட்ட தெலுங்கு நாளிதழ்களில் பணியாற்றிய இவர், தற்போது பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில், பிரசாத், அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.

Madras High Court Senior Reporter Prasad passes away

1970-களில் ஒரு பத்திரிகையில் வடசென்னை பகுதி நிருபராக தன் பணியை தொடங்கியவர், பின்னர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த செய்தி சேகரிக்கும் நிருபராக நேர்த்தியான செய்தி சேகரிப்பு பணியை செய்துவந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் செய்தியாளராக பணியாற்றிய இவர், குறிப்பாக சென்னை உயர் நீதிமன்ற செய்தி சேகரிப்பில் 23 ஆண்டுகளுக்கு மேலாக மூத்த செய்தியாளராக தனது பணியை தொடர்ந்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட இவர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிரமாக முயற்சித்தும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பிரசாத் மறைவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

உயர்நீதிமன்ற மூத்த நிருபர் திரு.பிரசாத் அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மூலம், தொடர்ச்சியாக கேட்டறிந்து வந்தேன், உயர்நீதிமன்ற நிருபர்களின் முன்னோடி அவர்,என்னுடைய சிந்தனையும் அவருடைய சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.

என்னுடன் தனிப்பட்ட முறையில் நல்ல தொடர்பில் இருந்தவர், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது எனக்கு தினம்தோறும் ஆறுதல் கூறுவார்,அவர் மனைவி மூலம் மூலிகை ரசம் வைக்க டிப்ஸ் கொடுக்க செய்தார். தெய்வீக சிந்தனை கொண்ட அவர் அயோத்யாவில் ராமர் கோவிலின் பூமி பூஜை நாளின் போது இறைவனடி சேர்ந்துள்ளார்..

அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு,அவருடைய குடும்பத்தார்க்கும் சார்ந்தோர்க்கும் என்னுடைய வருத்தங்கள், அவரது ஆன்மா இறைவன் மடியில் இளைப்பார பிரார்த்திக்கிறேன். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர் பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+