கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை.. ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான, ஓஷன் லைப் ஸ்பேஷஸ் நிறுவனத்தை
எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை ஸ்ரீராம், எஸ்.கே பீட்டரிடம் கேட்டதாகவும்
இதற்கு எஸ்.கே பீட்டர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து எஸ்.கே. பீட்டர் மீது ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி வரை பணபரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இதை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா? என அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவன அதிபர் எஸ் கே பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை ஆவணங்களுடன் ஆஜராகுமாறு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பீட்டருக்கும் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து பீட்டர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இருவருக்கிடையேயான தொழில் பிரச்னையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு என கூறப்பட்டுள்ளது. மேலும், தன் மீதான சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு நடைபெற்றது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி,அமலாக்கத்துறையின் நடவடிக்கை நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் எனவே அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகியிருந்தார். வழக்கை விசாரித்து நீதிபதிகள் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications