Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளச்சாராய மரணங்கள்- தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு- நாளை மறுநாள் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அதிமுக தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 49 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர்.

high court kallakurichi Liquor Death Tamil Nadu

அதிமுகவின் முந்தைய வாதம்: அப்போது அவர்கள், விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். விஷச் சாராய விற்பனை உள்ளாட்சி அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடக்காது என்பதால், அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தமிழக அரசு விளக்கம்: தமிழக அரசுத்தரப்பில் வழக்கறிஞர் முனியப்பராஜ், விஷ சாராய விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

இன்று விசாரணை: இதையடுத்து, வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், இந்த வழக்கை இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக
ஒப்புதல் தெரிவித்தனர். இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

300 பேர் குடித்த விஷ சாராயம்: இன்றைய விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.செல்வம் வாதிடுகையில், தமிழ்நாடு அரசின் மொத்த துறையும் தோல்வி அடைந்துள்ளது. பலி எண்ணிக்கை 100-ஐ தொடுவதற்கும் வாய்ப்புள்ளது. கருணாபுரத்தில் உள்ள 500 பேரில் 300 பேர் விஷச்சாராயம் அருந்தியுள்ளனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பணம் பெற்றுக்கொண்டு விஷச்சாராய விற்பனையை அனுமதித்துள்ளனர். சட்டவிரோத விற்பனை குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றுவதில் பலனில்லை என்றார்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி: பின்னர் நீதிபதிகள், விஷச்சாராய விற்பனையை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? 2023-ம் ஆண்டு விஷச்சாராய பலி ஏற்பட்டதை அடுத்து விஷச்சாராயத்தை ஒழிக்க கடந்த ஓராண்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விற்பனை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதற்கு முன்பும் விஷச்சாராய மரணம் நிகழ்ந்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? விஷச்சாராய விற்பனை தொடர்பாக கவனத்திற்கும் கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பாலியாகிவுள்ளன. இதற்கு யார் பொறுப்பு? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அரசியல் உள்நோக்கத்துடன் வாதம்: இதற்கு அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், பொதுநல வழக்கு என்றுக்கூறி அரசியல் உள்நோக்கத்துடன் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரர் கட்சி ஆட்சியில் இருந்த போது 2001ம் ஆண்டு புதுப்பேட்டையில் விஷச்சாராய மரணம் நிகழ்ந்தது. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 போலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 47 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 89 பேர் உடல் நிலை சீராக உள்ளது. கூடுதல் மருத்துவக்குழு, ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் கைது நடவடிக்கைகள் இருக்கும். அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் இருக்கும். விஷச்சாராய மரணங்களை தடுப்பது தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 161 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு: இதையடுத்து விழுப்புரம், மரக்காணம் சம்பவங்களுக்கு பிறகு விஷச் சாரய விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+