ஒரே நாளில்.. மதுரை, திருச்சிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. இன்று அடிக்கல் நாட்டப்படும் ஐடி டைடல் பார்க்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் இரு டைடல் பூங்காக்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்ட உள்ளது. மதுரை மற்றும் திருச்சியில் அமைய உள்ள டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு, காணொலிக் காட்சி மூலமாக இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 18 மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

மதுரையில் 345 கோடி செலவில் 640,000 சதுர அடி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் 350 கோடி செலவில் 630,000 சதுர அடி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ptr palanivel thiagarajan tidel park

ஐடி பார்க்: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் டைடல் பார்க் உருவாக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மதுரையில் அமைக்கப்பட உள்ள ஐடி பார்க்கிங் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 2 மாதிரி படங்களில் ஒன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று ட்வின் டவர் பாணியில் இரண்டு டவர்கள் கொண்ட தலா 25 மாடிகள் கொண்ட கட்டிட மாதிரி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்னொன்று வட்ட வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு கவனம்; தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய ஐடி முதலீடுகள் வரவில்லை. அதை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது.

1996-2001ல் எந்த அடித்தளம் போடப்பட்டதோ அதை வைத்தே தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பிழைத்து வருகிறது. புதிய திட்டங்களின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக பெங்களூர், ஹைதராபாத் ஐடி துறையின் வேகத்தால் நாம் அடைந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும். முக்கியமாக பாரம்பரிய ஐடி தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதை மனதில் வைத்து சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் ஐடி பார்க் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஐடி பார்க் முடிவு; அதன் அடிப்படையில், மதுரையில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் ஐடி பார்க் அமைப்பது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், தொழில் என்று வந்துவிட்டால் பெரிய தொழில் மட்டும் முக்கியமில்லை. சிறிய தொழிலும் முக்கியம்தான். அப்போதுதான் பரந்துபட்ட வளர்ச்சி ஏற்படும். பாண்டியன் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம்.

பாண்டியன் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம். என்று கூறினார்.

திருச்சி ஐடி பார்க்

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான சுற்றுசூழல் அனுமதி தற்போது கிடைத்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்தது.

முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியில் 350 கோடி செலவில் 630,000 சதுர அடி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பல இட ஆய்வுகளுக்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட்டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது. இது தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு உள்ளது. இங்கே கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+