மதுரை திமுக நிர்வாகி VK குருசாமியை தட்டித் தூக்கிய போலீஸ்.. வெள்ளைக்காளி கொலை முயற்சி வழக்கில் கைது!
சென்னை: ரவுடி வெள்ளைக்காளி கொலை முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுரை திமுக நிர்வாகி வி.கே. குருசாமியை மங்களமேடு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பிறகு குன்னம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி முன்னாள் திமுக மண்டலத் தலைவராக பதவி வகித்தவர் வி.கே. குருசாமி. இவருக்கும், அதிமுக நிர்வாகி ராஜபாண்டிக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்விரோதம் இருந்து வருகிறது. இரு தரப்பினர் இடையே குடும்பப் பகையாக நீடித்து வருகிறது.

இதன் காரணமாக, இரு தரப்பையும் சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். குருசாமி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த சூழலில், பிரபல ரவுடியும் ராஜபாண்டியின் ஆதரவாளருமான வெள்ளைக்காளியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த மாதம் அவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
பெரம்பலூர் டோல்கேட் அருகே வந்த போது வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், காவலர் ஒருவர் காயமடைந்த நிலையில், வெள்ளைக்காளி உயிர் தப்பினார். போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோதே ரவுடியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், ரவுடி கொட்டு ராஜா தலைமையிலான கும்பல்தான் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொட்டு ராஜாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், போலீசாரை தாக்க முயன்ற போது என்கவுன்ட்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 14 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுரை திமுக நிர்வாகி வி.கே. குருசாமியை மங்களமேடு போலீசார் இன்று கைது செய்தனர். பிறகு குன்னம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வி.கே. குருசாமியுடன் சேர்த்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, கடந்த வாரம் வி.கே. குருசாமி மதுரையில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பல பொய் வழக்குகளை போலீசார் என்மீது பதிவு செய்துள்ளனர். ஆனால் பெங்களூரில் என்னை வெட்டியவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நான் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. நான் சட்டத்தை மீறி போக மாட்டேன் என உருக்கமாகப் பேசி இருந்தார் விகே குருசாமி.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்!












Click it and Unblock the Notifications