Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திருப்பரங்"குன்றில்தான் தீபம் ஏற்ற முடியவில்லை! இங்கு ஏற்றியதில் மகிழ்ச்சி! நீதிபதி சுவாமிநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "குன்றில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் சபா அரங்கில் தீபம் ஏற்றியது மகிழ்ச்சியாக உள்ளது" என சென்னையில் நடந்த ஒரு விழாவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் பேசினார்.

Thirupparankundram

ஸ்ரீதியாக பிரம்ம கானசபாவின் 80 ஆவது ஆண்டு விழா தி.நகர் வாணி மகாலில் நேற்று நடந்தது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ர மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் சுவாமிநாதன் விழா மலரை வெளியிட முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

குன்றில் தீபம்

இந்த விழாவில் நீதிபதி சுவாமிநாதன் பேசியதாவது: குன்றில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் அரங்கில் தீபம் ஏற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. விழா என்றாலே கொண்டாட்டம். சில விழாக்களால் புனிதத்துவம் கிடைக்கும். அதனால், சஷ்டி பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விழாக்களை தவிர்ப்பதில்லை. இன்று, இந்த சபாவின் சதாபிஷேகமாக தான் பார்க்கிறேன். தனி மனிதரிடம் எப்படி ஆசி பெறுவோமோ, அதை போல் இந்நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

வித்தியாசம் என்ன

நமக்கும், பிற நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் கலாசாரம். அதுவே அடுத்த சமுதாயத்தில் இருந்தும் நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. இதை நாம் இழந்துவிட்டால், நம் அடையாளமே போய்விடும். இந்த அடையாளத்தை காப்பாற்றுவது நம் கோவில்கள் மற்றும் இது போன்ற சபாக்கள் தான். இந்த சபா தொடர்ந்து 80 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சபாவின் செயல்பாட்டால், தமிழ் சமுதாயத்திற்கு மேன்மை கிடைத்துள்ளது என நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை தீபத்தன்று

கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் எப்போதும் உச்சி பிள்ளையார் கோயிலில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்றப்படும். இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

100 ஆண்டுகள் பழமை

இந்த நிலையில் 100 ஆண்டுகளுக்கு முன்னர், மலை உச்சியில் உள்ள ஒரு தூணில் தீபம் ஏற்றப்பட்டு வந்ததாம். இதனால் அநத் தூணில் தீபமேற்ற அனுமதிக்கக் கோரி மதுரை அமர்வில் பாஜகவை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அனுமதி தந்த சுவாமிநாதன்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் கேட்ட அந்த இடத்தில் தீபமேற்ற அனுமதி வழங்கினார். இதை மனுதாரர், கோயில் இணை ஆணையரிடம் தெரிவித்தாராம். ஆனால் கோயில் நிர்வாகமோ உச்சி பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் தூணில் விளக்கேற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்தது.

நீதிமன்றத்தை நாடிய ராமரவிக்குமார்

இதையடுத்து மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். அப்போது நீதிபதி, "6 மணிக்கு தீபத்தூணில் விளக்கு ஏற்றாவிட்டால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யலாம். நீங்கள் போய் அந்த இடத்தில் விளக்கு ஏற்றுங்கள். உங்களுக்கு சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள்" என உத்தரவிட்டார்.

தீபம் ஏற்ற மீண்டும் அனுமதி

இந்த நிலையில் மாலை 6 மணிக்கு உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து பாஜக, இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அங்கு கலவரம் நடத்து போல் தடுப்புகளை எல்லாம் தூக்கி வீசினர். இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல் துறை 144 தடை உத்தரவு போட்டனர். இதையடுத்து ராமரவிக்குமார், மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். அப்போது சுவாமிநாதன், "நீங்கள் போய் தீபம் ஏற்றுங்கள்" என நேற்று முன் தினம் உத்தரவிட்டிருந்தார். அங்கு சென்ற போது மனுதாரருக்கு மலை மீது செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பாஜகவினரும் இந்து அமைப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தினர். இதில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 9ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+