Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை, மதுரை இருக்கட்டும்.. வேலூரையும் பாருங்க.. நாங்க பிளைட்ல போக வேண்டாமா! துரைமுருகன் கலகல பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பிடிஆர் பதிலளித்த நிலையில், அப்போது அமைச்சர் இடையே துரைமுருகன் கூறிய கருத்து அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மத்திய அரசின் பட்ஜெட் கடந்த பிப். 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதேபோல தமிழ்நாடு பட்ஜெட்டும் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

இப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதனிடையே நேற்று சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசும்போது ஒரு இடத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. நேற்று அவையில் முதலில் பேசிய கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், "பட்ஜெட்டில் கோவைக்கு ஒரு சில திட்டங்கள் அறிவித்திருந்தார்கள். குறிப்பாகக் கோவை மெட்ரோவை அறிவித்துள்ளார்கள். கோவை நகருக்கு மெட்ரோ வேண்டும் என்று நான் முதல் உரையிலேயே குறிப்பிட்டிருந்தேன். இப்போது அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கனெக்டிவிட்டி முக்கியம்

கனெக்டிவிட்டி முக்கியம்

அதேபோல கோவையில் மத்தியச் சிறை அமைந்துள்ள பகுதியில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதற்கு இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ. 43 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும். மேலும், இப்போது நாட்டில் வேகமாக வளரும் நகரங்களில் கோவை முதலிடத்தில் இருக்கிறது. இருப்பினும், வளரும் நகரங்களுக்கு கனெக்டிவிட்டி ரொம்பவே முக்கியம். ஆனால், கோவையில் கனெக்டிவிட்டி மோசமாக உள்ளது. இதை நானே சட்டசபையில் பல முறை பதிவு செய்துள்ளேன்" என்றார்.

அமைச்சர் பிடிஆர் பதில்

அமைச்சர் பிடிஆர் பதில்

இதற்கு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அவர் கூறுகையில், "கோவை மெட்ரோவுக்கு பல முறை திட்டம் போடப்பட்டது. இருப்பினும், அதில் பல இடங்களில் புதிதாக மேம்பாலங்களைக் கட்டியுள்ளனர். இதனால் அதிக எடையைத் தாக்க முடியாமல் லோடு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ வழித்தடங்களைப் பல முறை மாற்றியமைத்துள்ளோம். இப்போது பீசிபிலிட்டு டெஸ்ட் செய்து அனுமதி தந்துள்ளோம். இன்னும் இரண்டு மாதத்தில் இதில் அடுத்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்.

கோவை ஏர்போர்ட்

கோவை ஏர்போர்ட்

கோவை ஏர்போர்ட்டை பொறுத்தவரை, விரிவாக்கத்திற்குக் கடந்தாண்டே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நில கையகப்படுத்தும் பணிகளிலும் 85% முடிந்துவிட்டது. எஞ்சிய பணிகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விமான நிலையத்தைப் பொறுத்தவரை இன்டர்நேஷனல் டிக்லரேஷன் நமது கையில் இல்லை. அது மத்திய அரசிடம் உள்ளது. நாங்கள் இப்போது எங்கள் பணிகளை விரைவாகச் செய்து வருகிறோம்.

நாங்களே காத்திருக்கிறோம்

நாங்களே காத்திருக்கிறோம்

இந்த கேள்வியைக் கேட்ட உறுப்பினர் இருக்கும் கட்சி தான் டெல்லியில் அரசை நடத்திக் கொண்டு இருக்கிறது. அவர்கள் தான் அவங்க அமைச்சரிடம் இது குறித்துக் கேட்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் மதுரை விமான நிலையத்திற்குக் கோரிக்கை வைத்துவிட்டுக் காத்துக் கொண்டிருக்கிறோம். கோவைக்குக் கேட்கும் போது, அப்படியே மதுரை ஏர்போர்ட்டையும் சர்வதேச விமான நிலையமாக மாற்றினால் சிறப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

துரைமுருகன் நறுக்

துரைமுருகன் நறுக்

அப்போது எழுந்த திமுக மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், "எல்லாரும் மதுரை, கோவை விமான நிலையம் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.. வேலூர்னு ஒன்று இருக்கிறது. அதை யாராவது கவனிச்சீங்களா? எல்லா பணிகளும் நிறைவடைந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் பணிகள் தான் பாக்கி இருக்கிறது.. அதையும் இருக்கு முடிஞ்சா நாங்களும் ஃபிளைட்ல போவோம்" என்றார். அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+