ரூ.1000 உரிமைத்தொகை.. இப்போதே 15% விண்ணப்பம் ஓவர்.. சென்னை ஆணையர் ஜெ ராதாகிருஷ்ணன் பரபர தகவல்!
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கும் மணி நேற்று தொடங்கிய நிலையில், சென்னை மாநகராட்சியில் 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15 சதவீதம் டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி இத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கான தகுதிகள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து, ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் அளித்து, இரண்டு கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
சென்னையில் நேற்று ரேஷன் கடை பணியாளர்கள், தங்கள் கடைக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, விண்ணப்பம் மற்றும் முகாம் நடைபெறும் நாள், நேரம் அடங்கிய டோக்கன் ஆகியவற்றை வழங்கினர். வீட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் விண்ணப்பத்தை வழங்கி அதற்கான ஒப்புகை சீட்டையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்ட பயிற்சி முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று காலையில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ஜெ.ராதாகிருஷ்ணன், 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15 சதவீதம் டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. 703 ரேஷன் கடைகளுக்கு ஏற்றபடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு குழுவினர் அந்தந்த ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

10 இடங்களுக்கு ஒரு மண்டல குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஒரு முகாம் என்ற அளவில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஏற்றவாறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2500 ரேஷன் கார்டுகள் உள்ள கடை என்றால் 5 முகாம்கள் அருகருகே இருக்கும். தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என்றால், அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மூலமாக உடனடியாக ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் உருவாக்கிக் கொடுக்கப்படும் என்றும் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 1,417 ரேஷன் கடைகளில் 17.81 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. முதற்கட்டமாக 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 600க்கு மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என சில நாட்களுக்கு முன்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு!












Click it and Unblock the Notifications