அப்படியே ஒதுக்கப்பட்ட உதயநிதி கேம்ப்? சென்னை துணை மேயராகும் மகேஷ்.. "அவருக்கு" கல்தா தந்த ஸ்டாலின்!
சென்னை: சென்னை துணை மேயராக மகேஷ் குமார் பதவி ஏற்க உள்ளார். திமுகவிற்கு சென்னை மாநகராட்சியில் பெரும்பான்மை உள்ள நிலையில் நாளை இவர் துணை மேயராக பதவி ஏற்பது உறுதி ஆகி உள்ளது.
சென்னையின் அடுத்த மேயராக சென்னை திருவிக நகர் 74வது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட உள்ளார். இவருக்கு 28 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை சென்னையில் மட்டும் 200 வார்டுகளில் 153 வார்டுகளில் தனியாக வென்று திமுக பெரும்பான்மை பெற்று மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.

பெண்கள்
முன்னதாக சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இந்த முறை பெண் மேயர் பதவி ஏற்க உள்ளதால் துணை மேயர் பதவி இந்த முறை ஆண் வேட்பாளர்களுக்கு பெரும்பாலும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் அதற்கான கடும் போட்டி நிலவி வந்தது.

துணை மேயர்
மேயர் பதவி இல்லாததால் துணை மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் பலருக்கு இடையே போட்டி நிலவி வந்தது. திமுக சார்பாக கேகே நகர் தனசேகரன் மற்றும் சைதை மகேஷ் குமார் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரண்டு பேருமே துணை மேயர் பதவிக்கு தகுதியானவர்களாக பார்க்கப்பட்டனர். அதிலும் தேர்தல் வெற்றிக்கு பின் யாருக்கு இந்த பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது.

தனசேகரன்
இதில் கேகே நகர் தனசேகரனுக்கு வாய்ப்பு இருந்தாலும் சில புகார்கள் காரணமாக அவரை திமுக தலைமை தேர்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக சைதை மகேஷ் குமார் கொஞ்சம் எளிமையானவர். அதேபோல் அமைதியான குணம் கொண்டவர் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. அதோடு நீண்ட காலமாக இவர் திமுக சார்பாக கவுன்சிலராக இருக்கிறார். அதிகாரபூர்வமாக இவர் மீது எந்த விதமான கிரிமினல் கேசும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகேஷ்
நீண்ட காலமாக கவுன்சிலர் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு துணை மேயர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக முக்கியமாக உதயநிதி கேம்பை சேர்ந்த சிற்றரசு, மதன்மோகன் இருவருக்கும் மேயர் பதவி ரேஸ் இருந்தது. சென்னை மேற்கு திமுகவின் மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் மறைவை அடுத்து சிற்றரசு அந்த பொறுப்பிற்கு வந்தார். அதன்பின் உதயநிதிக்கும் மிகவும் நெருக்கம் ஆனார்.

நெருக்கம்
அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள வார்டில் சிற்றரசு போட்டியிட்டு வென்றார். இவர் அன்பில் மகேஷ், உதயநிதி இருவருக்கும் மிகவும் நெருக்கம். இதனால் இவருக்கே துணை மேயர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக மகேஷ் குமாருக்கு இந்த பதவி சென்றுள்ளது. அமைச்சர் பொன் முடிக்கு நெருக்கமானவர் மகேஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications