Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாத்தையும் முடிச்சுட்டு வாங்க..ஓபிஎஸ் போட்ட ஸ்டிரிக்ட் ஆர்டர்! டெல்லியிலேயே முகாமிட்ட தேனி டீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணையில் இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் டெல்லியிலேயே முகாம் இட்டு உள்ளனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆனால் வழக்கு தான் இறுதி கட்டத்தில் இருக்கிறது மோதல் இன்னும் தொடரும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

தற்போது அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இருதரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்து எழுத்துப்பூர்வ வாதமானது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கே சாதகமாக வரும் என ஓபிஎஸ் தரப்பு வலுவாக நம்புகிறது. காரணம் அதிமுக தொடர்பாக எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த விதிகளின்படி பொதுக்குழு மற்றும் தொண்டர்கள் ஆதரவு என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கின்றனர். இதனால் எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த விதிகள் நிச்சயம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை கொண்டு வரும் என ஓபிஎஸ் தரப்பு நம்புகிறது.

டெல்லியில் முகாம்

டெல்லியில் முகாம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் டெல்லியிலேயே முகாம் இட்டுள்ளனர். வழக்கு முடியும் வரை அங்கேயே தங்கியிருந்து சட்ட வியூகங்கள் மற்றும் பாஜக தரப்பை அணுகுவது என முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்வதற்காகவே நிர்வாகிகள் அங்கு தங்கி இருக்கின்றனர். அந்த வகையில் சில முக்கிய நிர்வாகிகள் டெல்லியிலேயே தங்கியியுள்ளனர்.

முக்கிய நிர்வாகிகள்

முக்கிய நிர்வாகிகள்

அந்த வகையில் அதிமுக மாநிலங்களவை எம்பியும் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளருமான தருமர், சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போது ஓபிஎஸ் அணியின் தேர்தல் பிரிவு செயலாளரான சுப்புரத்தினம், ராஜலட்சுமி, காசிராஜன், பிரகாஷ் குமார் ஆகியோர் டெல்லியில் முகாம் மட்டும் உள்ளனர்.

வழக்கறிஞர் அணி

வழக்கறிஞர் அணி

கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களான ரஞ்சித் குமார், ராவல், குரு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தீவிரவாதங்களை முன் வைத்தனர். அந்த வழக்கறிஞர் குழுவோடு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம் ஆகியோர் முக்கிய வாதங்களை முன் வைத்தனர்.

அதிரடி நகர்வுகள்

அதிரடி நகர்வுகள்

அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக தரப்பில் சுப்புரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டும் அல்லாமல் நாளை எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினர்களான தருமர், தேர்தல் பிரிவு செயலாளரான சுப்புரத்தினம், வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் பிரகாஷ் குமார், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கின்றனர் இப்படி தமிழக டெல்லியை பொருத்தவரை மூத்த நிர்வாகிகள் முகாமிட்டு அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி டீம் அதிருப்தி

எடப்பாடி டீம் அதிருப்தி

அத்தோடு அதிமுக தொடர்பான வழக்கையும் இவர்கள் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.விரைவில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தகவலை தெரிந்து கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்கள் தரப்பைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளையும் டெல்லிக்கு அனுப்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+