அதிருப்தியால் பாஜகவில் இணைகிறாரா? .. பொட்டில் அடித்தாற் போல் விளக்கமளித்த முன்னாள் எம்பி மைத்ரேயன்
சென்னை: அதிமுகவுடன் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு மனவருத்தம் இருந்தது உண்மைதான், ஆனால் இப்போது அது இல்லை என்றார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்.
Recommended Video
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார், யார் தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்கும், இரண்டாவது தலைநகர் மதுரையா, திருச்சியா உள்ளிட்ட குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த இரு தினங்களாக அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினமும் கூட, இது போன்ற தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது யாரோ ஒருவர் இதுபோன்ற விஷமத்தனமான கருத்துகளை பரப்புவதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.

மனவருத்தங்கள்
அதிமுகவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். முன்பு இருந்த மனவருத்தங்கள் எல்லாம் இப்போது அறவே இல்லை. இது போன்ற பொய்யான செய்திகளை நம்பாதீர்கள். தினமும் என்னால் இதற்கெல்லாம் பதிலளித்து கொண்டிருக்க முடியாது. நான் பாஜகவில் இணைய போவதாக நீண்ட நாட்களாக செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.

தவறான செய்தி
ஆனால் நான் இன்னும் இணையவில்லை. இதிலிருந்தே மக்கள் இது தவறான செய்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் மைத்ரேயன். இவரை ஜெயலலிதா 3 முறை எம்பியாக்கி அழகுபார்த்தார். கடந்த ஆண்டுடன் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. அப்போது அவர் நாடாளுமன்றத்தில் கடைசியாக உரையாற்றினார்.

இரங்கல்
அவர் கூறுகையில் என்னை 3 முறை எம்பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. என் மீது ஜெயலலிதா அன்பு காட்டினார். இது வேறு யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு. அவரை இந்த நேரத்தில் நான் நினைத்து பார்க்கிறேன். இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கவே இல்லை.

மீண்டும் பதவி கேட்ட மைத்ரேயன்
அது போல் நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என கண்ணீர் விட்டு அழுதார். இவர் 15 ஆண்டுகள் எம்பியாக இருந்த நிலையிலும் மீண்டும் அதே பதவிக்காக அதிமுக தலைமையிடம் முறையிட்டார். ஆனால் அப்பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் மைத்ரேயன் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் எழுந்தன. வதந்திகளும் பரவின.
-
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications